5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அட்லி இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படம்.. ஹீரோ யாரு தெரியுமா..?

Atlee's A6 : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் அட்லி. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. இந்த வகையில் அட்லி தனது இயக்கத்தில் ஆறாவது திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறியுள்ளார்.

barath-murugantv9-com
Barath Murugan | Published: 01 Oct 2024 19:07 PM
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி இவர் இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராகத்  திரைத்துறையில் தனது முதல் காலடியை பதித்தார். இவர் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற திரைப்படங்களில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

1 / 6
2013ல் வெளியான தனது  முதல் திரைப்படமான "ராஜா ராணி"  மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார்.  இந்த திரைப்படத்தில்  நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா மற்றும் ஜெய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம்  வெளியானது.

2 / 6
இத்திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் 2016ல் வெளியான திரைப்படம் தான் "தெறி". இத்திரைப்படமானது அட்லிக்கு விஜய் ரசிகர்கள் மூலமாகப் பெரிய வெற்றியைத் தந்தது. "பாக்ஸ் ஆபிசில்"  சும்மா செம வசூலை அடித்தது இந்த திரைப்படம் .

3 / 6
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயின் கூட்டணியில் மெர்சல் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கி பெரும் வெற்றியைப் பெற்றார் அட்லி. பின் இவர் பல முன்னனி நடிகர்களை வைத்து  திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

4 / 6
இதைத்தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகரான "ஷாருக்கான்", மற்றும் நயன்தாரா நடிப்பில் 2023ல் வெளியான திரைப்படம்  "ஜவான்". இந்த திரைப்படமானது  தமிழ், இந்தி, மலையாளம்  மற்றும் தெலுங்கு எனப் பல மொழிகளில் வெளியான பான்  இந்தியத் திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 / 6
அட்லியின் அடுத்த திரைப்படமாகக் கூறப்படும் திரைப்படத்திற்கு "A6" என தற்காலிகமாக டைட்டிலை வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் பாலிவுட்  பிரபல நடிகர் சல்மான்கான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 / 6
Latest Stories