5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விளம்பரம் டூ சினிமா.. நடிகை வேதிகாவின் சினிமா பயணம் இதுதான்!

தமிழ் திரைப்படங்களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை வேதிகா. கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்துள்ளார். தமிழில் சிம்பு, ராகவா லாரன்ஸ் அர்ஜுன் மற்றும் அதர்வா போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துப் பிரபலமானார்.

barath-murugan
Barath Murugan | Published: 25 Oct 2024 09:10 AM
நடிகை வேதிகா கன்னட மொழியைத் தாய் மொழியாகக் கொண்டாலும் அவர் முழுவதுமாக  வளர்ந்து மும்பையில் தான். சிறுவயதிலிருந்தே மாடலிங் தொழிலில் பிரபலமான இவர் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். அதில் இவர் நடிகர் சூர்யாவுடன் ஒரு விளம்பரத்தில் நடித்து தனது ஊடகம் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 2006ல் நடிகர் அர்ஜுன் இயக்க மற்றும் நடித்த மதராசி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

1 / 6
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து 2007ல் நடிகர் ராகவா லாரன் இயக்கிய  முனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில் தமிழில் வெளியான சிவகாசியில் ரீமேக் திரைப்படமான விஜயதசமி  என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து டோலிவுட்டில் அறிமுகமானார். இந்த திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத நிலையில் மறுபடியும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

2 / 6
இந்நிலையில் தமிழில்  காளை மற்றும் மலை மலை என்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களிடையே மிகவும் நெருக்கமான நடிகையானார். இதைத் தொடர்ந்து இவருக்குத் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் பரதேசி.

3 / 6
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013ல் வெளியான திரைப்படம் பரதேசி. பாலா திரைப்படம் என்றாலே நடிகர்கள் பயப்படும்  அளவிற்கு அவரின் திரைப்படங்கள் இருக்கும் எண்ணத்தில் எந்த நடிகரும் நடிக்க முன்வருவதில்லை அப்படிப் பட இயக்குநர் பாலாவின் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வேதிகா பிரபலமானார். உண்மை சம்பவத்தின் அடிப்படையாக வெளியான இந்த திரைப்படத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.

4 / 6
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து கன்னட  மொழிகளிலும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், கன்னடம் , தெலுங்கு  மற்றும் மலையாளம் எனப் பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களிடையே மிகவும் பரிட்சியமானார்.

5 / 6
தமிழில் தற்போது வெளியான பேட்ட ராப் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபு தேவாவுடன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வினோதம் மற்றும் ஜங்கிள் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். எப்போது தனது இணையப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை  வேதிகாவின் சமீப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 / 6
Latest Stories