இதைத்தொடர்ந்து அயன்,பையா மற்றும் சிறுத்தை போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார் இவர். இந்த திரைப்படங்கள் இவருக்குத் தொடர் வெற்றியைத் தந்து இவருக்கு சூப்பர் ஹிட் திரைப்படங்களாக வெற்றி பெறச் செய்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.