5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தொகுப்பாளினி டூ சினிமா.. நடிகை சிம்ரனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Actress Simran : தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாகத் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் இவர். தற்போது இவர் முதல் முதலில் வாங்கிய சம்பளத்தைப் பற்றி கூறியுள்ளார்

barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 02 Oct 2024 18:05 PM
90ஸ் காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன்.1995ல் இந்தி திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான இவர் பின் 1997ல் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சிவாஜி கணேசன், சரோஜா தேவி போன்றவர்களின்  நடிப்பில் வெளியான ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலமாக   அறிமுகமானார்.

1 / 5
பின், பூவே பூச்சூடவா, வி.ஐ.பி , நேருக்கு நேர் மற்றும் நட்புக்காக போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இது போல் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.

2 / 5
இவர் தமிழில் மட்டுமில்லாமல் பல மொழிகளில் திரைப்படங்களை நடித்துள்ளார். இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.  அங்கு பெரியளவில் சோபிக்கவில்லை என்பதால், தமிழ் சினிமாவில் முழுவதாக களமிறங்கினார். "ஆல்டோட்ட பூபதி" என்ற பாடலுக்கு விஜயுடன்  இவர் ஆடிய நடனம் இவருக்கு நடன அழகி என்ற பட்டத்தையும் வாங்கித்தந்தது.

3 / 5
இவர் நடிப்பில் 1998ல் வெளியான "துள்ளாத மனமும் தூளும்" என்ற திரைப்படமானது இவருக்கு "பிளாக் பஸ்டர்" திரைப்படமாக  அமைந்தது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்,மணிவண்ணன் மற்றும் தாமு போன்ற முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.பின் 2003ல் தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பின் சினிமாவில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திச் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

4 / 5
இவர் திரையுலகில் நுழைவதற்கு முன் இவர் இந்தி தனியார் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த தனியார் தொலைக்காட்சியில் அவர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 1990ல் தொகுப்பாளராக அங்கு வேலைப்பார்க்கும் போது 2500 ரூபாய் சம்பளம்  வாங்கியதாகக் கூறியுள்ளார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 / 5
Follow Us
Latest Stories