5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு… ராஷ்மிகா நியூ ஆல்பம்

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வருகின்ற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Dec 2024 09:40 AM
கடந்த 2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்கிற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவிற்கு கிடைத்தது. இதற்கு முன்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில்  நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அதனை நிராகரித்தார் நடிகை ரஷ்மிகா.

1 / 6
தன்னுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனா என்றால் அவரது ரசிகர்கள் தொடங்கி தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர்கள் வரை பலரும் கூறுவது நேஷ்னல் கிரஷ் என்பதுதான்.

2 / 6
பான் இந்திய நடிகையாக தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2021-ம் ஆண்டு தமிழில் வெளியான நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.

3 / 6
இதனால் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் என்பதை விட இதற்கு முன்னதாக தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் மூலமாக தெலுங்கு மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

4 / 6
தொடர்ச்சியாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு என்கின்ற திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா, தற்பொழுது தனுஷின் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

5 / 6
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் வருகின்ற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

6 / 6
Latest Stories