கேரளாவில் பிறந்த பிரபல நடிகை ரம்யா நம்பீசன், தனது 14வது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார். திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து மலையாள மொழி திரைப்படங்களில் இளம் நடிகையாக கடந்த 2000வது ஆண்டு இவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் "ஒரு நாள் ஒரு கனவு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமான ரம்யா நம்பீசன் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
தமிழில் இவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது.
பீட்சா திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து 'சேதுபதி' என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் செம ஹிட்டாக தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினர்.
பாடகியாகவும், நடிகையாகவும் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் ரம்யா நம்பீசன், இறுதியாக தமிழில் விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது தமிழ் மற்றும் மலையாள மொழியில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ரம்யா நம்பீசனின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.