எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் ஒரு திறமையான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இயக்குனர் ராஜமௌலி நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான 'பாகுபலி' படத்தில் இவர் ஏற்று நடித்த ராஜமாதா கதாபாத்திரம் மாஸ்டர் பீஸாக அமைந்தது. இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தார் ரம்யா கிருஷ்ணன்.