5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகை ராஷி கண்ணா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

தெலுங்கு திரைப்படங்களின் மூலம் அறிமுகமானாலும் தமிழ்த் திரைப்படங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கதாநாயகி ராசி கண்ணா. 2013ல் வெளியான தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இன்ஸ்ட்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

barath-murugan
Barath Murugan | Published: 06 Nov 2024 19:49 PM
நடிகை ராசி கண்ணா 1900ம் ஆண்டு டெல்லியில் பிறந்துள்ளார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் நடிகையாக சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம். இவர் முதலில் ஐஏஎஸ் அதிகாரியாக அல்லது பாடகியாக வேண்டும் என்று  ஆசைப்பட்டாராம்.

1 / 5
தனது கல்லூரி நாட்களில் விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த இவருக்கு 2013ல் இயக்குநர் ஷுஜித் சிர்கார் இயக்கத்தில் வெளியான "மெட்ராஸ் கஃபே" என்ற இந்தி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமாகினார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

2 / 5
பின் இவர் 2014ல் வெளியான "ஓஹலு குசகுசலாடே" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.  தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையானார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து 2018ல் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான "இமைக்கா நொடிகள்" என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

3 / 5
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில்  அடங்க மறு, அயோக்கியா மற்றும் சங்கத்தமிழன் எனத் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ்  மக்களிடையே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியப்  பிரபல நடிகைகளின் பட்டியலில்  இடம்பெற்றுள்ளார்.

4 / 5
தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இமைக்கா நொடிகள், அடங்க மறு மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தது. இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் அகத்தியா மற்றும் தெலுசு கடா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். தமிழில் நடிகர் ஜீவாவுடன்  இவர் நடிக்கும் அகத்தியா திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories