குழந்தை நட்சத்திரம் டூ டாப் நடிகை… மீனா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்கள் என்று கூறப்படும் ரஜினி, கமல், அஜித், விஜய், சரத்குமார், பிரபுதேவா, பிரபு, அர்ஜூன் என அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மீனா. தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ (தமிழில் ‘பாபநாசம்’) படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மோகன்லாலுடன் இணைந்து நடித்தார். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.