அந்த பிரபல நடிகருடன் டின்னர் செல்ல ஆசை… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
Actress Aishwarya Rajesh: கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தப் படம் ‘கனா’. விவசாயத்தையும், பெண்கள் கிரிக்கெட்டையும் பேசிய இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமிக்க நாயகியாக திகழ்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்
தொடர்ந்து நாயகிகளை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக புலிமடா படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.