5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

டும் டும் டும்… நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த் – வைரலாகும் போட்டோஸ்

சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதே கோயிலில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாகவே சித்தார்த் நடத்தியுள்ளார். சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Sep 2024 14:33 PM
நடிகர் சித்தார்த் கடந்த சில வருடங்களாக நடிகை அதிதி ராவை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்தப் புகைப்படங்களை நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

1 / 6
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கடந்த 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாக செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

2 / 6
இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது” என பதிவிட்டிருந்தார். அதிதியும் இதேபோல பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

3 / 6
சமீபத்தில் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், அதே கோயிலில் இன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

4 / 6
நிச்சயதார்த்தத்தை போலவே திருமணத்தையும் ரகசியமாகவே சித்தார்த் நடத்தியுள்ளார். சினிமா பிரபலங்களை எல்லாம் அழைக்காமல் எளிமையாக கோயிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

5 / 6
திருமண புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அதிதி ராவ் இனிமேல் என் வாழ்க்கையில் நீயே என் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் என கவிதை மழையாக பொழிந்துள்ளார். பிரபலங்கள் ரசிகர்கள் என பலர் சித்தார்த் மற்றும் அதிதி ராவை வாழ்த்தி வருகின்றனர்.

6 / 6
Latest Stories