5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vettaiyan: முன்பதிவில் சாதனை.. அசால்ட்டாக வேட்டையாடும் ரஜினியின் வேட்டையன்!

Pre Booking Collection : தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படமானது அக்டோபர் 10ல் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிஙவிறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் முன்பதிவில் எவ்வளவு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது பற்றி காணலாம்.

barath-murugan
Barath Murugan | Updated On: 10 Oct 2024 10:11 AM
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.

1 / 5
இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திலிருந்து இவரின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது.

2 / 5
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு   மும்பை, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது. இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு,இந்தி மற்றும் கன்னம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

3 / 5
நடிகர் ரஜினி ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படமானது  நாளை (அக்டோபர் 10) ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் "அட்வான்ஸ் புக்கிங்" விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படம் "ப்ரீ புக்கில்" எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

4 / 5
வேட்டையன் திரைப்படமானது உலகளாவிய ப்ரீ புக்கில் சுமார் "50 கோடிக்கும்" மேல் வசூலித்துள்ளது. எனவே நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் எப்படியும் முதல் நாள் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Latest Stories