மழை காலம் வந்தவுடன் இருமல், சளி மற்றும் தொண்டை வலி போன்றவற்றால் அவதிப்படுவீர்கள். ஏலக்காய் தண்ணீர் உங்களுக்கு நன்மை பயக்கும். ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது தொண்டை தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளையும் போக்க உதவி செய்கிறது. இது தவிர, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.