Swollen feet: உங்களுக்கு திடீரென கை, கால்கள் வீங்குகிறதா..? இதற்கான காரணம் தெரியும்..?
Edema: காரணமே இல்லாமல் உங்களுக்கு வீக்க பிரச்சனை ஏற்பட்டால், எடிமா என்று நீங்கள் நினைத்தால் மருத்துவரை அணுகலாம். நீங்கள் இதை வீட்டிலேயே பரிசோதிக்க விரும்பினால், வீக்கம் உள்ள பகுதியை 15 விநாடிகள் அழுத்தவும். அழுத்தி எடுத்தபின் பள்ளம் தோன்றினால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. இதற்கு பிறகு, சில பரிசோதனைகளுக்கு பிறகு, எடிமா இல்லையா என்பதை மருத்துவர் சோதித்து சொல்வார்கள்.
கைகள், கால்கள் மற்றும் வாய் உட்பட உடலின் பல பகுதிகளில் திடீரென வலி எடுக்கும். இது சிறிது நேரத்தில் வீக்கமாக மாறும். பலர் வீக்கத்தை பெரிதாக எடுத்து கொள்ளமால், இந்த பிரச்சனையை தவிர்த்துவிடுவார்கள். இந்த வீக்கம் எதுனால் ஏற்படுகிறது என்று யோசிப்பதற்குள், அந்த வீக்கம் மறுநாளே காணாமல் போய்விடும். சில சமயங்களில் நீங்கள் மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். அந்தவகையில், இன்று நம் உடலில் எதனால் திடீரென வீக்கங்கள் ஏற்படுகிறது..? அதற்கு பெயர் என்ன..? இதை எப்படி சரிசெய்வது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்ப்போம்.
உடலில் திடீரென ஏற்படும் வீக்கம், வலி பிரச்சனைகளுக்கு எடிமா என்பார்கள். இது பொதுவாக பாதங்கள், முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில நேரங்களில் முகத்திலும் ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனை பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் காணப்படும். இன்றைய நவீன வாழ்க்கையில் இந்த பிரச்சனை இளைஞர்களுக்கும் தோன்றுகிறது.
எடிமா பிரச்சனை எதனால் ஏற்படுகிறது..?
திசுக்களில் அதிகப்படியான திரவம் உருவாக தொடங்கும்போது எந்தவொரு நபருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். மேலும், நீங்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நிற்கும்போது இந்த பிரச்சனைகள் நிகழ்கிறது. பொதுவாக, கோடை காலத்தில் பலருக்கு இந்த பிரச்சனை அடிக்கடி தோன்றும். இதேபோல், அதிகப்படியான உப்பு எடுத்து கொள்ளுதல் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளால் எடிமா பிரச்சனை ஏற்படலாம்.
எடிமா பிரச்சனையை எவ்வாறு கண்டறிவது..?
காரணமே இல்லாமல் உங்களுக்கு வீக்க பிரச்சனை ஏற்பட்டால், எடிமா என்று நீங்கள் நினைத்தால் மருத்துவரை அணுகலாம். நீங்கள் இதை வீட்டிலேயே பரிசோதிக்க விரும்பினால், வீக்கம் உள்ள பகுதியை 15 விநாடிகள் அழுத்தவும். அழுத்தி எடுத்தபின் பள்ளம் தோன்றினால், நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. இதற்கு பிறகு, சில பரிசோதனைகளுக்கு பிறகு, எடிமா இல்லையா என்பதை மருத்துவர் சோதித்து சொல்வார்கள்.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண வெப்பநிலையே உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்கும். சருமத்திற்கு இரத்தம் குறைவாக பாயும்போது வீக்கம் ஏற்படுகிறது. எலுமிச்சை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலில் ஏதேனும் சேதமடைந்த திசுக்களை சரிசெய்து வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், கீல்வாதம் போன்ற அழற்சி நோய்களையும் எலுமிச்சை சரிப்படுத்தும். எலுமிச்சை தண்ணீர் அல்லது ஜூஸ் குடிப்பது வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவும்.
கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற ஏதேனும் நோயால் உங்களுக்கு எடிமா பிரச்சனை இருந்தால் அதை உங்களால் தடுக்க முடியாது. இருப்பினும், அதிக உப்பு உட்கொள்வதால் மட்டுமே, இந்த பிரச்சனையை தடுக்கலாம். நீங்கள் உப்பை குறைவாக சாப்பிட வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சனையை படிப்படியாக குறைக்கும்.
எடிமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவர்கள் டையூரிக் என்ற மருந்தை உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்து சிறுநீர் பாதையில் இருந்து திரவம் மற்றும் உப்பை அகற்ற பெரிதும் உதவுகிறது. இந்த மருந்து நீர் மாத்திரைகள் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வகையான மாத்திரைகள் மருத்துவர்களின் ஆலோசனைபடி எடுத்துக்கொள்வது நல்லது.
ALSO READ: Food Recipes: 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 2 சூப்பர் ரெசிபி.. சூடான சோறுடன் சாப்பிட ஜோராக இருக்கும்!
எடிமா பிரச்சனையை தவிர்ப்பது எப்படி..?
- நீங்கள் அதிகநேரம் உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது அவ்வப்போது கால்களை நகர்த்தி பயிற்சி கொடுங்கள்.
- எடிமா பிரச்சனை உள்ளவர்கள் காலுறைகள் (பேண்டேஜ்) பயன்படுத்தலாம். இது எடிமா பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
- நீண்ட நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது. இது உங்கள் எடிமா பிரச்சனையை குறைக்கலாம்.
- மருத்துவர் கொடுக்கும் மருந்தை உட்கொண்டு, அவர் கூறும் வழிமுறைகளை பின்பற்றவும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)