5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whiskey History: விஸ்கி உருவான வரலாறு தெரியுமா? நன்மைகளும் தீமைகளும் ஒரு பார்வை!

Health Tips: மதுவை எடுத்து கொள்வதில் சில நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான மது அருந்துதல் நம் உடலில் உள்ள சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க செய்யும். ஆனால், மதுவை நாம் மருந்தாக உட்கொண்டால், அது நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும். அந்த வகையில் விஸ்கி போன்றவற்றை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

Whiskey History: விஸ்கி உருவான வரலாறு தெரியுமா? நன்மைகளும் தீமைகளும் ஒரு பார்வை!
விஸ்கி (image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 06 Sep 2024 11:19 AM

விஸ்கி நன்மைகள்: அமிர்தமே என்றாலும் அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். எதையுமே குறைந்த அளவில் எடுத்துகொண்டால், அதிலிருந்து நல்ல பலன்களை நம்மால் பெற முடியும். மதுவை எடுத்து கொள்வதில் சில நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான மது அருந்துதல் நம் உடலில் உள்ள சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் நுரையீரல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க செய்யும். ஆனால், மதுவை நாம் மருந்தாக உட்கொண்டால், அது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அந்த வகையில் விஸ்கி போன்றவற்றை உட்கொள்வதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

விஸ்கி என்பது கோதுமை, பார்லி, சோளம், கம்பு, பக்வீட் போன்ற பல்வேறு வகையான தானிய மாஷ்களின் நொதித்தல் மூலம் தயாரிக்கப்படும் ஒரு காய்ச்சி வடிகட்டிய மதுபானமாகும். முதலில் நாம் விஸ்கியை உட்கொள்ளும் போது, அதில் ஐஸ் மற்றும் தண்ணீருடன் கலக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

ALSO READ: Health tips: உற்சாகத்தையும் இளமையையும் கொட்டி தரும் நெல்லிக்காய்!

விஸ்கியின் வரலாறு:

விஸ்கி என்பது கோதுமை, சோளம், கம்பு மற்றும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானமாகும். பொதுவாக விஸ்கியில் மால்டா விஸ்கி மற்றும் கிரேன் விஸ்கி என இரண்டு வகைகள் உள்ளன. விஸ்கி முதன்முதலில் 15 ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்தில் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, அயர்லாந்து, கனடா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உலகத் தரம் வாய்ந்த விஸ்கியை உற்பத்தி செய்யும் நாடுகளாக திகழ்கின்றன.

சளி:

விஸ்கி போன்றவை சளி போன்ற தொல்லைகளும் பெரிய அளவில் நிவாரணத்தை அளிக்கும். மழை மற்றும் குளிர்காலத்தில் இருமல், சளி போன்ற பிரச்சனைகளை நம் உடல் சந்திக்கும். இத்தகைய சூழ்நிலையில், இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் பெற விஸ்கியை உட்கொள்ளாலம். இது நம் உடலுக்கு நன்மை தரும். சிறிது அளவிலான விஸ்கியில் வெந்தீர், எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிடுங்கள். இது சளியில் இருந்து நிறைய நிவாரணம் அளிக்கும்.

அல்சைமர்:

அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற மூலை தொடர்பான நோய்களில் அபாயத்தை குறைக்க விஸ்கி சிறந்தது என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த விஸ்கியை குறைந்த அளவில், சரியான முறையில் எடுத்து கொள்வதன் மூலம் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும். இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய்:

நீரிழிவு காரணிகளை குறைக்க விஸ்கி சிறந்ததாக பார்க்கப்படுகிறது. ர்த்த மற்றும் குறைந்த அளவுகளில் விஸ்கி குடிப்பது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும், உடலில் இன்சுலின் சரியான அளவை பராமரிக்கவும் விஸ்கி சிறப்பாக செயல்படுகிறது. விஸ்கியை எடுத்து கொள்வது நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: Health Tips: பெண்களின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா..? நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

நோய் எதிர்ப்பு சக்தி:

விஸ்கி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், மிதமான அளவில் விஸ்கி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது தொற்று நோய்க்கிருமிகளின் ஆற்றலை குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது:

விஸ்கியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் எலாஜிக் அமிலத்தின் இருப்பு ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுவதற்கு காரணமாகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.

தீமைகள்:

  • விஸ்கியை அதிக அளவில் குடிப்பதால் கல்லீரலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். நாளுக்குநாள் அதிகரிக்கும்போது கல்லீரல் செயலிழப்பிற்கும் வழிவகுக்கும்.
  • அதிகளவில் விஸ்கி எடுத்துகொண்டால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய நோய் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
  • கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாக விஸ்கியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் விஸ்கி எடுத்து கொண்டால் கருச்சிதைவு, முன்கூட்டியே குழந்தை பிறப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கலாம்.
  • அதிக குடிப்பழக்கம் கல்லீரல் புற்றுநோய், தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

குறிப்பு: விஸ்கியில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தபோதிலும், மிதமாக எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குறைந்த அளவில் எடுத்துகொள்வது மிக மிக முக்கியம்.

Latest News