Which Milk is Best: எந்த பாலை குடிப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது..? பசும் பாலா..? ஆட்டுப்பாலா..?
Milk Benefits: ஆயுர்வேதத்தின்படி, புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய் பாலை விட சிறந்த பால் வேறு எதுவும் இல்லை. குறிப்பிட்ட மாதங்கள் கடந்த பிறகு வேண்டுமானால், தாய் பாலுக்கு பதிலாக பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு முடிந்தவரை எருமை பால் கொடுப்பதை தவிருங்கள். எருமைப்பாலில் அதிக கொழுப்பு இருப்பதால் குழந்தைகள் குடிக்கக்கூடாது. இவை குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் தொந்தரவு செய்யும்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு நம் உடலுக்கு பால் மிகவும் முக்கியமானது. பால் குடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் குழந்தை பருவத்திலிருந்தே அறிந்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல், பிறந்ததில் இருந்து பால் குடித்து அதன் பலனையும் பெற்று வருகிறோம். பாலில் அதிகளவு கால்சியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை நம் ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மை தருகின்றன. பாலின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரியும் நமக்கு பசு, எருமை, ஆடு மற்றும் ஒட்டக பால் உள்ளிட்ட வகைகளில் எது சிறந்தவை என்பது பற்றி தெரியவில்லை. அதை பற்றி உங்களுக்காக இங்கே கூறுகிறோம்.
ALSO READ: Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!
தாய் பால்:
ஆயுர்வேதத்தின்படி, புதிதாக பிறந்த குழந்தைக்கு தாய் பாலை விட சிறந்த பால் வேறு எதுவும் இல்லை. குறிப்பிட்ட மாதங்கள் கடந்த பிறகு வேண்டுமானால், தாய் பாலுக்கு பதிலாக பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகளுக்கு முடிந்தவரை எருமை பால் கொடுப்பதை தவிருங்கள். எருமைப்பாலில் அதிக கொழுப்பு இருப்பதால் குழந்தைகள் குடிக்கக்கூடாது. இவை குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாமல் தொந்தரவு செய்யும். அந்தவகையில், குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகும்.
ஆட்டுப்பால்:
காசநோய், டெங்கு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆட்டுப்பால் குடித்தால் சிறந்த பலனை பெறுவார்கள். பசும் பாலுக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் ஆட்டு பால் உள்ளது. காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆட்டுப்பாலை தொடர்ந்து குடித்து வந்தால், விரைவில் குணமடைய உதவி செய்யும்.
எருமைப்பால்:
வயதானவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எருமைப்பாலை குடிக்கலாம். பசு மற்றும் ஆடுக்கு பிறகு எருமைப்பால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எருமைப்பால் உடல் வளர்ச்சிக்கும், உடலில் உள்ள தசை/ கொழுப்பின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உடல் வலிமையை அதிகரிக்க விரும்புவோருக்கு எருமை பால் மற்றும் நெய் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் எருமைப் பாலை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தை பெறுவார்கள். இதன் பால் தூக்கத்தை ஏற்படுத்த சிறந்ததாக கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள தூக்கத்தை தூண்டும் மருந்துகளில் சிறந்தது எருமைப்பால்.
ஒட்டக பால்:
தமிழ்நாட்டில் ஒட்டகப் பால் கிடைக்காது. இருந்தாலும், அதன் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம். ஒட்டக பால் குடித்தால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். ஒட்டக பாலில் வைட்டமின் சி பசுவின் பாலை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் பி1, பி2-வும் நிறைந்துள்ளது.
தினமும் ஒரு கிளாஸ் பச்சை பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
பச்சை பாலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை உட்கொள்வதன்மூலம் உடலை ஆரோக்கிமாகவும், வலுவானதாகவும் மாற்ற முடியும். சூடான பாலை விட பச்சை பாலில் அதிக சத்துக்கள் மற்றும் பண்புகள் உள்ளன என்று பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சூடாகும் பாலை விட பச்சையாக குடிக்கும் பால் வேகமாக ஜீரணமாகும். பச்சை பாலில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை பல வகையில் நம் உடலுக்கு நன்மைகளை தருகிறது. பச்சைப் பால் உட்கொள்வது நம் வயிற்றை ஆரோக்கியமான வைத்திருப்பது மட்டுமல்லாமல், பல நோய்களுக்கு ஒரு மருந்தாகவும் கருதப்படுகிறது.
பச்சை பாலில் உள்ள என்சைம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் பச்சைப் பால் குடிப்பதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி நமது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. பச்சை பாலில் உள்ள பண்புகள் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவி செய்கிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)