Tulsi Leaves Benefits: தினமும் துளசி இலைகளை மென்று சாப்பிடுங்க.. பிபி முதல் சுகர் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தும்!
Health Tips: வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கவுள்ளதால், இந்த நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு கால மாற்றம் காரணமாக சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, தினமும் காலையில் சிறிது நேரம் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். துளசி இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் பிரச்சனையை தரும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பெரும்பாலானவர்களின் வீடுகளில் காணப்படும் சிறிய துளசிச் செடியில் மிகப்பெரிய அளவிலான மருத்துவ பண்புகள் உள்ளது. வீட்டின் முற்றத்தில் துளசி செடியை வைப்பது இந்து குடும்பங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத நம்பிக்கையின்படி, துளசி செடி வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை நீக்குவதாக நம்பப்படுகிறது. ஆனால், துளசி மத நம்பிக்கைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கான வரப்பிரசாதமாகவும் கருதப்படுகிறது. துளசி இலைகளில் பல ஆன்டி- பாக்டீரியல், ஆன்டி- செப்டிக் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இதில் வெளிப்படும் ஒருவிதமான காரத்தன்மை சளி மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்க உதவி செய்கிறது. அந்தவகையில், இன்று ஒரு நபர் தினமும் ஒரு சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் என்ன அற்புதமான நன்மைகளை தரும் என்று இங்கே பார்ப்போம்.
ALSO READ: Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!
தலைவலி:
துளசி இலைகளை உட்கொள்வதன்மூலம் தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தலைவலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் துளசி இலையுடன் இஞ்சி சாறு கலந்து நெற்றியில் தடவலாம். இதை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் சிறிது நாட்களிலேயே தலைவலியிலிருந்து விடுபடலாம்.
சளி மற்றும் இருமல்:
வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கவுள்ளதால், இந்த நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு கால மாற்றம் காரணமாக சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, தினமும் காலையில் சிறிது நேரம் துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். துளசி இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் பிரச்சனையை தரும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன்மூலம், சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
துளசியில் உள்ள மருத்துவ பண்புகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இரத்தத்தில் உள்ள அதிகப்படியான இன்சுலின் பிரச்சனைகள், அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் துளசி பயனுள்ளதாக இருக்கும்.
இதய நோயாளிகளுக்கு நல்லது:
இதய பிரச்சனைகள் உள்ளவர்கள் துளசி இலைகளை தவறாமல் உட்கொள்வது நல்லது. துளசி இலைகளை உட்கொள்வதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைப்பதில் நன்மை பயக்கும்.
மூட்டுவலி:
துளசி இலை சாறு மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம் மற்றும் பிற மூட்டு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. துளசியை உட்கொள்வதால் நரம்புகளில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.
நுரையீரல்:
துளசி இலை சாறு நுரையீரல் சக்தியை அதிகரிக்கும். இது இருமல், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் காரணமாக சுவாசப் பாதையை சுத்தமாக வைத்திருக்கும்.
ALSO READ: Healthy Tips: வைட்டமின் ‘டி’ குறைபாட்டால் இத்தனை ஆபத்தா? அதிகரிக்கச் செய்ய வழிகள் என்ன?
தோல் பிரச்சனைகள்:
துளசி இலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முகப்பரு, ஒவ்வாமை, தடிப்புகள் மற்றும் தழும்புகள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை பயன்படுத்தி சருமத்தில் உள்ள நச்சுகளை நீக்கலாம். துளசி இலைகளில் காணப்படும் அனைத்து கூறுகளும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிக அளவில் மேம்படுத்தும்.
மன அழுத்தம் குறையும்:
மன அழுத்தத்தை குறைக்க துளசி இலைகளை உட்கொள்ளலாம். துளசி இலைகளில் இருக்கும் அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. துளசி இலைகள் நரம்பு மண்டலத்தை தளர்த்துவதன் மூலம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்குகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்கும்:
துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் பிரச்சனைகள் நீங்கும். தினமும் காலையில் துளசி இலைகளை மென்று தின்று வந்தால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்குவது மட்டுமின்றி துர்நாற்றம் பிரச்சனையும் நீங்கும்.