5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

குக்கரில் இந்த உணவுகளை மட்டும் சமைக்காதீங்க.. உடலுக்கு மிகவும் தீங்கு..!

Cooker Cooking: விரைவாக சமைப்பதற்கு பிரஷர் குக்கர் உதவியாக இருப்பதாக குடும்ப தலைவிகள் கருதுகிறார்கள்.‌ நேரம் பறக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் குக்கர் ஒரு வரப்பிரசாதம் என்பதேயாகும் பலரும் எண்ணமாக இருக்கிறது. ஆனால் குக்கரில் சமைப்பதிலும் கட்டுப்பாடு வேண்டும். சில உணவுப் பொருட்களை குக்கரில் சமைப்பது தவிர்ப்பது நல்லது என்கின்றனர் என்னென்ன உணவுப் பொருட்களை குக்கரில் சமைக்க கூடாது என்பது தெரிந்து கொள்வோம்.

mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 27 Oct 2024 17:28 PM
அரிசி: பொதுவாக, பானையில் வடித்து சமைக்கும் சோறில் மாவுச்சத்து 30 முதல் 40 சதவீதம் குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை அது உடனடியாக கூட்டாது. ஆனால் குக்கரில் சமைக்கும் சாதத்தில் கலோரி, குளுக்கோஸ் அதிகம் என்பதால் திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கு வாய்ப்பு உண்டு. தொடர்ந்து, குக்கரில் சமைத்த சாதத்தை உட்கொண்டு வந்தால், சர்க்கரை நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

1 / 7
காய்கறிகள் : காய்கறிகளில் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பிரஷர் குக்கரில் சமைக்கும்போது அவை முற்றிலும் அழிந்துவிடும். எனவே பெரும்பாலான காய்கறிகள், குறிப்பாக பச்சை இலை காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் சமைப்பதே சிறந்தது.

2 / 7
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் சமைப்பது சரியானது அல்ல. உருளைக் கிழங்கில் அதிகமாக மாவுச்சத்து உள்ளது. குக்கரில் ஏற்படும் அதிக வெப்பநிலை, உருளைக்கிழங்கின் மாவுச்சத்தை குறைக்கிறது. இது தவிர, வேக வைத்த உருளைக் கிழங்கில் அதிக அளவு ஆன்டி - நியூட்ரியன்ட் கள் இருப்பதால்,அவை, அத்தியாவசிய சத்துகளை உடல் கிரகிப்பதை குறைக்கும்.

3 / 7
மீன்: மீனை குக்கரில் சமைக்கும்போது, அதிக வெப்ப நிலை காரணமாக அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்படுகின்றன. அதோடு மீனின் சுவையும் குறைந்துவிடும். மீனை சாதாரண பாத்திரத்தில் சமைத்தால்தான் அதன் சத்துகளையும், சுவையையும் பெற முடியும்.

4 / 7
கீரை: பிரஷர் குக்கரில் கீரையை சமைக்கக் கூடாது. பொதுவாக கீரை சமைக்கும்போது வெப்ப நிலை குறைவாக இருக்க வேண்டும். அப்போது தான் அதில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்படும். ஆனால் பிரஷர் குக்கரில் விரைவாக அதிக வெப்பநிலையில் கீரையை சமைப்பதால் அதிலுள்ள சத்துக்கள் குறைகின்றன. அதோடு கீரை பஞ்சு போல் ஆகிவிடுகிறது. இப்படி சமைத்து சாப்பிடுவது, ஆரோக்கியத்தை அளிப்பதில்லை.

5 / 7
கேக்குகள், பிஸ்கட்டுகள்: தற்போது சிலர், கேக்குகள், பிஸ்கட்டுகள் போன்ற வற்றை 'பேக்கிங்' செய்ய பிரஷர் குக்கரை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் 'யூடியூப்' பார்த்து இவ்வாறு செய்கிறார்கள் என்றாலும், அதைத் தவிர்ப்பதே நல்லது. காரணம், குக்கரில் செய்யப்படும் கேக்கின் சுவை, வழக்கமான கேக்கின் சுவையில் இருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கும். எனவே கேக் சாப்பிட்ட திருப்தி கிடைக்காது.

6 / 7
பிஸ்தா: பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அத்துடன், சர்க்கரை கட்டுப்பாடு, கண் ஆரோக்கியம் போன்ற சில நன்மைகளையும் பிஸ்தா கொண்டுள்ளது. குக்கரில் சமையலுக்கு பிஸ்தாவை பயன்படுத்தினால், அதிக வெப்பநிலை காரணமாக தேவையற்ற கொழுப்பு கள் அதில் சேரும். மேலும் அதன் சத்துகளும் குறைகிறது. இவை உடலுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும்.

7 / 7
Latest Stories