5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion: 10 நொடிக்குள் இந்த படத்துல இருக்க 5 வித்தியாசங்களை கண்டுபிடிங்க பார்க்கலாம்..

சமீப காலமாகவே மூளைக்கு வேலை தரும் வகையில் விஷூவல் அல்லது ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில், தற்போது ஒரு புதிர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரே மாதிரியான இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு படங்களில் உள்ள 5 வித்தியாசங்களை 10 நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் முடிகிறதா? என்று முயற்சி செய்து பாருங்கள்.

Optical Illusion: 10 நொடிக்குள் இந்த படத்துல இருக்க 5 வித்தியாசங்களை கண்டுபிடிங்க பார்க்கலாம்..
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 29 Jul 2024 23:30 PM

விஷூவல் அல்லது ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் சிந்திக்கும் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை சோதிப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதை ஒரு பொழுதுபோக்காவே பலரும் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு முறை சவாலிலும், பல விதமான படங்களை கொடுத்து, அதில் மறைக்கப்பட்ட பொருள், வித்தியாசங்கள் மற்றும் பிழைகளை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கம். ஒரு சில புதிர்கள் கண் பார்வைக்கு முக்கியத்தும் தரும் நோக்கில் வடிவமைக்கப்படுகின்றன. 

Also Read: Cardamom Milk Benefits: ஏலக்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா..? உடலுக்கு பல ஆரோக்கியங்களை தரும்!

அவை, முப்பரிமாண உலகத்தைப் பார்க்க நம் கண்களும் மூளையும் எவ்வாறு ஒன்றாகச் செயல்பட முடியும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. இந்த மாதிரியான புதிர் விளையாட்டுகள் மூளைக்கு வேலை கொடுக்கவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், புத்திசாலித்தனத்தை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றன. அதன்படி, தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக வருகிறது. 

பகிரப்பட்ட படத்தில் ஒரே மாதிரியான இரண்டு படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஒரு படத்தில் ஒரு பையன் ஒரு பெண்ணுக்கு குடை வழங்குவதுப் போல காட்டப்படுகிறது. அதேசமயம், அந்த பெண் வெட்கப்படுவதையும் காட்டுகிறது. அதேபோல், மற்றொரு படமும் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு படங்களிலும் சிறிய மாற்றங்கள் உள்ளன. நீங்கள் இரண்டு படங்களையும் கூர்மையாகக் கண்காணித்து, இரண்டுக்கும் இடையேயான முக்கிய 5 வித்தியாசங்களை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 10 நொடிகளுக்குள். உங்களுக்கு உண்மையிலேயே கண் பார்வை கூர்மையாக இருக்கிறது என்றால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

இரண்டு படங்களையும் நன்றாக உற்று கவனியுங்கள். இப்போது நீங்கள் எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்திருப்பீர்கள் அல்லவா? ஆனால், கண் பார்வை கூர்மை உள்ளவர்கள் உண்மையில் வித்தியாசமாக சிந்தித்து இருப்பீர்கள். அந்த 5 வித்தியாசங்களை 10 நொடிக்குள் கண்டும் பிடித்திருப்பீர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இல்லை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கீர்களா? இதோ விடையை பார்க்கலாம் வாங்க.

Also Read: Washing Machine Care Tips: வாஷிங் மெஷினை இப்படி பராமரித்து கொள்ளுங்கள்.. ரிப்பேர் ஆகாது..!

ரொம்பவே ஈஸி தான்… முதலில் பகிரப்பட்ட இரண்டு படங்களையும் நன்றாக உற்றுக் கவனியுங்கள். விடை எப்பவும் எளிதில் கண்டுபிடிக்கும் விதத்தில் அமைந்திருக்காது. அதனால், சின்ன விஷயத்தையும் தவறவிடாமல் உற்று கவனிக்க வேண்டும். தற்போது இரண்டு படத்திலும் உள்ள வித்தியாசங்களாவன குடையின் கைப்பிடி, அந்த பையன் சிரிப்பு மற்றும் பேண்ட், பெண்ணின் மேலாடை மற்றும் இடது கால் ஸூ ஆகும். என்ன விடையை கண்டுபிடுத்து விட்டீர்களா? இந்தப் படப் புதிர், உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்.

optical illusion ans

Latest News