5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rava Cake: வீட்டில ரவை இருந்தா இந்த கேக் செஞ்சிப் பாருங்க..

சாக்லேட், வெண்ணிலா, பிளாக்கரண்ட், ஸ்ட்ராபெரி என விதவிதமான கேக்குகள் பேக்கரியில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், சைவ பிரியர்களும், முட்டை அழற்சி உள்ளவர்களும் கேக்குகளை விரும்பமாட்டார்கள். இதோ அவர்களுக்காகவே முட்டையில்லாத ரவா கேக் எளிமையான முறையில் செய்யப் போகிறோம். இந்த பதிவில் முட்டையில்லாத ரவா கேக் எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Rava Cake: வீட்டில ரவை இருந்தா இந்த கேக் செஞ்சிப் பாருங்க..
ரவா கேக்
intern
Tamil TV9 | Updated On: 29 Jul 2024 23:37 PM

கேக்குகளை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சாக்லேட், வெண்ணிலா, பிளாக்கரண்ட், ஸ்ட்ராபெரி என விதவிதமான கேக்குகள் பேக்கரியில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், சைவ பிரியர்களும், முட்டை அழற்சி உள்ளவர்களும் கேக்குகளை விரும்பமாட்டார்கள். இதோ அவர்களுக்காகவே முட்டையில்லாத ரவா கேக் எளிமையான முறையில் செய்யப் போகிறோம். மேலும், இந்த கேக் செய்ய ஓவன் தேவையில்லை, குக்கர் இருந்தாலே போதும். பஞ்சுப்போன்ற ரவாக் கேக் மிகவும் சுவையாக செய்துவிடலாம்.

Also Read: Optical Illusion: 10 நொடிக்குள் இந்த படத்துல இருக்க 5 வித்தியாசங்களை கண்டுபிடிங்க பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

  • ரவை – 2 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • தயிர் – 1/2 கப்
  • பால் – 11/4 கப்
  • பேக்கிங் பவுடர் – 3/4 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்
  • சமையல் சோடா – 1/4 ஸ்பூன்
  • உப்பு – 1/4 ஸ்பூன்
  • எண்ணெய் – 1/2 கப்

ரவா கேக் செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது.

இப்போது மற்றொரு மிக்ஸி ஜாரில் ரவையை சேர்த்து, நன்றாக பொடியாக அரைத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய், தயிர் மற்றும் சர்க்கரை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். இப்போது 1 கப் பாலை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.

இதில் பொடித்த ரவை, அரைத்த தேங்காய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவை நன்றாக ஊறவேண்டும், எனவே 15 நிமிடங்கள் மூடி போட்டு மூடிவைக்கவும்.

Also Read: சீஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமா?

15 நிமிடங்களுக்கு பிறகு, அந்த கலவையில் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, ஏலக்காய் பொடி மற்றும் 1/4 கப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளுங்கள். 

இதை கேக் பேனில் அல்லது லேசான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை லேசாக தடவி அதில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது, ஒரு அடி கனமான குக்கரை 10 நிமிடங்கள் சூடேற்றி, அதில் ஒரு ஸ்டேண்டை வைத்து அதன் மீது கேக் பேனை வைத்து குக்கரை மூடிக்கொள்ளவும்.

விசில் எதுவும் போட வேண்டாம். 50  முதல் 60 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வேக வைக்கவும். கேக் வெந்ததும் வாசனை வர ஆரம்பிக்கும். அப்போது மூடியை திறந்து ஒரு டூத் ஸ்டிக்கை கேக்கில் விட்டு ஒட்டாமல் இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

இப்போது பேனை வெளியே எடுத்து 15 நிமிடங்கள் ஆற விடுங்கள். அவ்வளவு தான் கேக்கை வெட்டி பரிமாறலாம். பஞ்சுப்போன்ற ரவா கேக் ரெடி! நீங்களும் உங்க வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

டிப்ஸ்:

 இதில் ஏலக்காய் பொடிக்கு பதிலாக வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ் வாட்டர் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். வாசனை மற்றும் சுவை அற்புதமாக இருக்கும்.

கேக்கின் மேலே முந்திரி, பாதாம் போன்றவை நறுக்கி தூவிக் கொள்ளலாம்.

Latest News