5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Know Yourself: ’T’ ல் தொடங்கும் பெயர் உள்ளவர்களின் இயல்பு.. கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சும் காதல்!

T Letter: T என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், சிறிய விஷயங்களுக்கு பெரிய அளவில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் நபர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இதன் காரணமாக, தங்களை சார்ந்த விஷயங்களை ரகசியமாகவே வைத்து கொள்ள விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

Know Yourself: ’T’ ல் தொடங்கும் பெயர் உள்ளவர்களின் இயல்பு.. கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சும் காதல்!
T எழுத்து (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Sep 2024 17:25 PM

எழுத்துராசி: ஒரு நபரின் பெயரின் முதல் எழுத்து அவரது இயல்பு மற்றும் ஆளுமை பற்றி நிறைய கூறும். ஒரு நபரின் பெயரின் முடல் எழுத்தில் இருந்து எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று ஜோதிடம் நம்புகிறது. அதன் காரணமாக ஜோதிடத்தில், குழந்தை பிறக்கும் போது சந்திரனின் நிலையைக் கருத்தில் கொண்டு பெயரிடப்படுகிறது. இதுவரை நாம் A முதல் S வரையில் முதல் எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் என்ற விவரத்தை பார்த்துள்ளோம். அந்த வரிசையில் இன்று நாம் T என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். T என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் உள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும் மக்களவை நம்ப வைக்கும் பேச்சுத்திறன் கொண்டவர்கள். இவர்களை யாரும் கோபம் ஏற்றாத வரை அமைதியாகவே இருப்பார்கள். கடினமாக உழைப்பவர்களாக இருந்தாலும், ஒரு சில நேரம் அதிர்ஷ்டத்தையும் நம்புபவர்களாக இருப்பார்கள்.

ALSO READ: Know Yourself: ‘S’ல் தொடங்கும் பெயரைக் கொண்டவரா நீங்கள்..? கோபமும், பாசமும் உங்கள் குணம்!

பிடிவாத குணம்:

T என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும், சிறிய விஷயங்களுக்கு பெரிய அளவில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் நபர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்க்கை வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இதன் காரணமாக, தங்களை சார்ந்த விஷயங்களை ரகசியமாகவே வைத்து கொள்ள விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்கள் மீது எப்போது நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதன் காரணமாக, யாரை சார்ந்தும் இருக்க விரும்ப மாட்டார்கள்.

T என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் சமூகத்தில் தனக்கென நிறையப் பெயரைப் பெறுகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு பணியையும் புத்திசாலித்தனத்துடன் செய்து முடிப்பார்கள்.

திருமண வாழ்க்கை:

T என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவே இருக்கும். உங்கள் மனைவி/கணவருக்கு மதிப்பளித்தும், உணர்வுகளை புரிந்துகொண்டு நடந்து கொள்வீர்கள். தங்கள் துணைக்கு எந்தவிதமான கவலையும் இருந்துவிட கூடாது என பார்த்து பார்த்து நடந்து கொள்வீர்கள்.

ALSO READ: Know Yourself: R என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா? பெருந்தன்மை உங்கள் குணம்!

தொழில்:

T என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களுக்கு வேலை என்று வந்துவிட்டால், தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். இவர்களின் கூர்மையான அறிவுத்திறன் காரணமாக தங்கள் தொழிலில் எளிதாக வெற்றியை தொடுவார்கள். இவர்களுக்கு இயற்கையாகவே படிப்பில் ஆர்வம் இருப்பதால், அரசு மற்றும் நிர்வாகம் சார்ந்த இடங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவார்கள். தொழிலில் முதலீடு செய்வதில் துணிந்து இறங்குவார்கள். இது இவர்களுக்கு சிறிதளவு பின்னடைவை சந்தித்தாலும், பின் வரும் நாட்களில் வெற்றி காண்பார்கள். இவர்கள் பணத்தை வெளிப்படையாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவராக இருப்பார்கள். பொதுவாக இவர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் என்பதால், பணப்பற்றாக்குறையால் இவர்களின் எந்த வேலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

Latest News