Know Yourself: உங்கள் பெயர் ‘N’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா..? இது உங்கள் பலவீனம்!
N Letter: N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிறரிடத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் மிக அழமானதாகவும், அர்த்தமுடையதாகவும் இருக்கும். தாங்கள் வெளியிடும் வார்த்தைகளின் சக்தியால் மக்களை நம்ப வைப்பார்கள். இதுவே அவர்களின் வாழ்க்கையின் பலமாக இருக்கும். இவர்களின் புத்திசாலித்தன பேச்சுகளும், ஆழமாக சிந்திக்கும் திறனும் சுபாவத்தில் எளிமையானவர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் வெளிப்படுத்தும்.
எழுத்துராசி: உங்களுக்கு தெரியுமா ஒருவரின் பெயரின் முதல் எழுத்தை கொண்டு, அவர் எப்படி பட்டவர், அவரின் குணம் என்ன என்பதை கொண்டு தெரிந்து கொள்ளலாம். உங்கள் பெயர், உங்கள் பெயரில் உள்ள எழுத்துகள் உங்கள் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கையை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் உங்கள் பெயர் N என்ற எழுத்தில் தொடங்கினால், உங்கள் பெயரின் முதல் எழுத்தில் எண் கணிதத்தில் எவற்றை குறிப்பிடுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். கல்தேய கணக்கின்படி, N என்ற எழுத்து எண் 5 ஐ குறிக்கிறது, இது புதனால் ஆளப்படும் எண்ணாகும். இதன் காரணமாக அறிவாற்றல் மற்றும் எளிதில் பழக கூடிய நபர்களாக இருப்பீர்கள். என்ற எழுத்தைக் குறிக்கும் ராசியானது விருச்சிகம் ஆகும், இது செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது, எனவே N என்ற எழுத்தை அவர்களின் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் புதன், செவ்வாய் ஆகிய கிரங்களின் பலனும் கிடைக்கும்.
ALSO READ: Know Yourself: பெயரின் முதல் எழுத்து ‘M’ என்றால்..? நேர்மையே உங்கள் குணம்..!
தெளிவு:
N என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிறரிடத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் மிக அழமானதாகவும், அர்த்தமுடையதாகவும் இருக்கும். தாங்கள் வெளியிடும் வார்த்தைகளின் சக்தியால் மக்களை நம்ப வைப்பார்கள். இதுவே அவர்களின் வாழ்க்கையின் பலமாக இருக்கும். இவர்களின் புத்திசாலித்தன பேச்சுகளும், ஆழமாக சிந்திக்கும் திறனும் சுபாவத்தில் எளிமையானவர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் வெளிப்படுத்தும்.
சுய சிந்தனை:
பொதுவாக மற்றவர்களின் கருத்துகளை கேட்காமல் தங்களது சொந்த வழியிலேயே செல்ல விரும்புவார்கள். மற்றவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை அரிதாகவே மதிப்பார்கள். தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எதிரானவர்களாகவும், தங்கள் சொந்த அறிவு மற்றும் சொந்த புத்திசாலித்தனத்தின்படி செயல்படுவார்கள். சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்து வெளிப்புற அளவில் அமைதியாக தோன்றினாலும், மனதளவில் எரிமலையாய் வெடிப்பார்கள்.
அனைத்தின் மீதும் காதல்:
N என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களுக்கு பயணத்தின் மீதான காதல், உணவின் மீதான காதல் மற்றும் புதிய யோசனைகள் மீதான காதல் அதிகமாகவே இருக்கும். இவர்களின் இந்த காதலானது, மக்களை இவர்களை நோக்கி உற்றுநோக்க செய்யும். பெண்கள் ஒருவருடன் விரைவாக நட்பு கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒருவேளை யாரிடமாவது வெகு சீக்கிரத்தில் நட்பு ஏற்பட்டால், இறுதிவரை நட்பை பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
பலசாலி:
வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்கள் காரணமாக, N என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் மிகவும் வலிமையாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இது இவர்களுக்கு நல்ல மனம் படைத்தவர் என்ற தோற்றத்தை தரும்.
தடைகள்:
N என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களுக்கு வாழ்க்கையில் பல தடைகள், கஷ்டங்கள், இழப்புகள் மற்றும் போராட்டங்கள் இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக உங்களின் வலுவான ஆளுமை மற்றும் உறுதிப்பாடு இந்த சிரமங்களை சமாளிக்க பெரிதும் உதவும். மேலும், தங்களுக்கு பிடித்தவர்களுக்காக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன் நின்று சரி செய்ய முயற்சி செய்வார்கள்.
ALSO READ: Know Yourself: L-ல் தொடங்குகிறதா பெயர்..? நேர்மையும் விசுவாசமும் உங்கள் குணம்!
சிலசமயம் சுய நலவாதி என்ற பெயர்:
என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் சுயநலம் கொண்டவர்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம். இதன் காரணமாக தாங்கள் ஈடுபடும் செயல்களில் மிகவும் நம்பிக்கையுடன் காட்சியளிப்பார்கள்.
நண்பர்களால் சூழப்பட்டிருந்தாலும், நீங்கள் தனிமையை விரும்புவார்கள். உங்கள் பெற்றோர் மீது நீங்கள் பொழிந்த அன்பை புதிதாக ஒருவருக்கு கொடுக்க விரும்ப மாட்டீர்கள். இந்தச் சிக்கலில் இருந்து வெளிவருவது உங்களுக்குக் கடினம். இதன் காரணமாக, உங்கள் செயல்கள் உங்களை நேசிப்பவர்களை காயப்படுத்தலாம்.