5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: அகமதாபாத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Ahmedabad: ஒற்றுமை சிலை என்பது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவுச்சின்னமாகும். இந்த வெண்கல சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் மிக உயரமான சிலையாகவும் இது உள்ளது. இந்த ஒற்றுமை சிலை குஜராத்தில் உள்ள நர்மதை ஆற்றின் கரையில் சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. நேரம் இருப்பின், நீங்களும் இங்கு சென்று பார்வையிட்டு வாருங்கள்.

Travel Tips: அகமதாபாத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஒற்றுமை சிலை (Image: Siddharaj Solanki/HT via Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Sep 2024 16:45 PM

அகமதாபாத் டூர்: 1960ம் ஆண்டு மே 1ம் தேதி குஜராத் மாநிலம் பம்பாயிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் குஜராத் மிகவும் அற்புதமான இடங்களில் ஒன்றாகும். இதன் காரணமாக, பிரபலமான சுற்றுலா தலங்களை குஜராத் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. இந்த இடம் உலகின் மிகப்பெரிய உப்பு பாலைவனமாகும். இது ரன் ஆஃப் கட்ச் என்றும் அழைக்கப்படுகிறது. பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலரும் இங்கு வந்து விடுமுறை நாட்களை கொண்டாடி செல்கின்றனர். குஜராத்தின் காலச்சாரம், கலை மற்றும் பாரம்பரியத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், கண்டிப்பாக அகமதாபாத்தில் இந்த இடங்களுக்கு செல்லலாம். இந்தநிலையில், இன்று நாம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Travel Tips: அதிசயங்கள் நிறைந்த ஆந்திராவிற்கு டூர் பிளானா? இதுதான் சுற்றி பார்க்க சிறந்த இடங்கள்!

கன்காரியா ஏரி:

அகமதாபாத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று கன்காரியா ஏரி. இங்கு குழந்தைகளுக்கான ரயில், பலூன் சவாரி, வாட்டர் கேம், உணவு கடைகள் என ஏராளமான இடங்கள் மக்களை கண்டிப்பார் ஈர்க்கும். குழந்தைகளுடன் இந்த இடத்தை குடும்பத்துடன் சுற்றி பார்க்கலாம்.

சபர்மதி ஆசிரமம்:

சபர்மதி ஆசிரமம் ஒரு காலத்தில் மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோரின் இல்லமாக இருந்தது. இருப்பினும், இப்போது இது குஜராத்தின் அகமதாபாத்தின் மிகப்பெரிய சுற்றுலா தலமாக உள்ளது. சபர்மதி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. காந்திஜி இங்கிருந்து புகழ்பெற்ற தண்டி அணிவகுப்பை தொடங்கியதால் இந்த இடம் சத்யாகிரக ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது.

குஜராத் சயின்ஸ் சிட்டி:

அகமதாபாத்தில் உள்ள சயின்ஸ் சிட்டி முக்கிய இடங்களில் ஒன்று. குஜராத் சயின்ஸ் சிட்டி என்பது இளைஞர்களிடையே பொது விழிப்புணர்வை பரப்புவதற்கான குஜராத் அரசின் தனித்துவமான முயற்சியாகும். இந்த அறிவியல் நகரம் 107 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஹூதீசிங் ஜெயின் கோயில்:

ஹூதீசிங் ஜெயின் கோயில் ஜைன மதத்தின் 15வது தீர்த்தங்கரரான தர்மநாதருக்கு கட்டப்பட்டுள்ளது. இது இரண்டு மாடி வெள்ளை பளிங்கு கற்களால் ஆனது. குடும்பத்துடன் அமைதியாக நேரத்தை கழிக்க இது ஒரு நல்ல இடம்.

ஒற்றுமை சிலை:

ஒற்றுமை சிலை என்பது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவுச்சின்னமாகும். இந்த வெண்கல சிலை 182 மீட்டர் உயரம் கொண்டது. உலகில் மிக உயரமான சிலையாகவும் இது உள்ளது. இந்த ஒற்றுமை சிலை குஜராத்தில் உள்ள நர்மதை ஆற்றின் கரையில் சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. நேரம் இருப்பின், நீங்களும் இங்கு சென்று பார்வையிட்டு வாருங்கள்.

தோலாவிரா:

தோலாவிரா வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. சிந்து சமவெளி நாகரீகம் மற்றும் ஹரப்பா கலாச்சாரம் தொடர்பான பல விஷயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு சென்றால் வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Travel Tips: வெளிநாடு செல்ல ஆசையா? இந்த அண்டை நாடுகளுக்கு எளிதாக சென்று வாருங்கள்!

விஜய் விலாஸ்:

விஜய் விலாஸ் அரண்மனை 1929ல் கட்டப்பட்ட மிக பழமையான அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ரான் ஆஃப் கட்ச்சில் அமைந்துள்ளது. இந்த அரண்மனை கட்டிடக்கலை பார்வையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

Latest News