5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mushroom Pepper Fry: 10 நிமிடத்தில் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை.. இப்டி செஞ்சி பாருங்க..

பொதுவாக, காளானில் செய்யக் கூடிய அனைத்து வகையான ரெசிபிகளுமே மிகவும் சுவையாக இருக்கும். அதிலும், காளானை மிளகுடன் சேர்த்து வறுவல் செய்யும்போது சுவை உண்மையில் அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தி செய்யும்போது தக்காளி தொக்குக்கு பதிலாக இந்த மாதிரி ஈஸியான ஒரு சைடு டிஸை முயற்சி செய்து பாருங்கள். வெறும் 10 நிமிடத்தில் இந்த காளான் மிளகு வறுவலை செய்துவிடலாம். சூடான சாதத்திற்கும் அருமையாக இருக்கும். தற்போது இந்த பதிவில் காளான் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Mushroom Pepper Fry: 10 நிமிடத்தில் காரசாரமான காளான் பெப்பர் ஃப்ரை.. இப்டி செஞ்சி பாருங்க..
காளான்
intern
Tamil TV9 | Updated On: 29 Jul 2024 00:21 AM

பொதுவாக, காளானில் செய்யக் கூடிய அனைத்து வகையான ரெசிபிகளுமே மிகவும் சுவையாக இருக்கும். அதிலும், காளானை மிளகுடன் சேர்த்து வறுவல் செய்யும்போது சுவை உண்மையில் அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தி செய்யும்போது தக்காளி தொக்குக்கு பதிலாக இந்த மாதிரி ஈஸியான ஒரு சைடு டிஸை முயற்சி செய்து பாருங்கள். வெறும் 10 நிமிடத்தில் இந்த காளான் மிளகு வறுவலை செய்துவிடலாம். சூடான சாதத்திற்கும் அருமையாக இருக்கும். தற்போது இந்த பதிவில் காளான் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Also Read: Narkel Naru Recipe: இந்த 4 பொருள் இருந்தா போதும் சத்தான தேங்காய் லட்டு ரெடி..

தேவையான பொருட்கள்:

  • காளான் – 250 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
  • கடுகு – 1/2 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி-பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்
  • பச்சை குடை மிளகாய் – 1
  • பச்சை மிளகாய் – 1
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • கருப்பு மிளகு – 1 ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1/2 ஸ்பூன்
  • சீரக தூள் – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப

காளான் மிளகு வறுவல் செய்முறை:

முதலில் காளானை தண்ணீரில் நன்றாக கழுவி, அதை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். பிறகு, காளானை உங்களுக்கு விரும்பி வடிவில் வெட்டிக் கொள்ளவும். மிகவும் பொடுசாக வெட்ட வேண்டாம்.

இப்போது, பெரிய வெங்காயம், குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் மூன்றையும் நீண்ட வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். இவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு ஓரளவு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாக அரைக்க வேண்டாம். எல்லாம் தயார். காளான் வறுக்க ஆரம்பித்துவிடுவோம்.

ஒரு கடாயில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து சூடானது, 1/2 ஸ்பூன் கடுகை சேர்த்துக் கொள்ளவும். கடுகு நன்றாக பொறிந்ததும், நறுக்கி வைத்த பெரிய வெங்காயத்தை சேர்க்கவும்.

Also Read: Cold Water குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

மிதமான தீயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். கூடவே 1 சிட்டிகை உப்பு கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், 1/2 ஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

இஞ்சி-பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். இப்போது வெட்டி வைத்துள்ள காளான்களை சேர்த்து, மிதமான தீயில் நன்றாக வதக்கவும். காளான் வேக வேக தண்ணீர் வெளியிடும், அந்த தண்ணீர் முழுவதும் ஆவியாகும் வரை வேக வைக்கவும். 

காளானில் தண்ணீர் எதுவும் இல்லாமல் முழுவதுமாக வதங்கியதும், நறுக்கிய பச்சை குடை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக் வதக்கவும். பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை 1 கொத்தை சேர்த்து கிளறிவிடவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி, கொத்தமல்லி தூள், சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தூள் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து விடவும். 

கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, சப்பாத்தி அல்லது சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Latest News