Health Tips: மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளான்.. அருமருந்தாக செயல்படும் அற்புத உணவு!
Mushroom Benefits: காளான் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருளாகும். இதில், வைட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள் என பல ஆரோக்கிய ஆதாரங்கள் உள்ளன. காளான் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. உலகம் முழுவதும் தற்போது காளான்கள் கிடைப்பது சகஜமாகிவிட்டது. மருத்துவ குணங்களுக்காகவும், அதீத தேவைக்காகவும் இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது.
நாம் தினந்தோறும் பல வகையான உணவு வகைகள், காய்கறிகளை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், அவற்றின் பலன்களை பற்றி நாம் அறிந்து கொள்வதே கிடையாது. உங்களுக்கு அதிக பலன் தரும் ஒன்று காளான். இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். சைவம், அசைவம் என இருபாலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். காளான் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருளாகும். இதில், வைட்டமின்கள், தாது உப்புக்கள், அமினோ அமிலங்கள், ஊட்டச்சத்துகள் என பல ஆரோக்கிய ஆதாரங்கள் உள்ளன. காளான் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. உலகம் முழுவதும் தற்போது காளான்கள் கிடைப்பது சகஜமாகிவிட்டது. மருத்துவ குணங்களுக்காகவும், அதீத தேவைக்காகவும் இந்தியாவில் பல இடங்களில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில், காளான்களை உட்கொள்வதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Health Tips: தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா..? இதை செய்தால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்!
இதயத்திற்கு நல்லது:
காளான்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில், அதிகபடியான ஊட்டச்சத்துகளும், சில வகையான நொதிகளும் உள்ளன. காளான் சாப்பிடுவது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எலும்பு வலிமை:
காளானில் வைட்டமின் டி2 மற்றும் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. இவை அனைத்தும் உடலில் உள்ள எலிம்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள், காளான் சாப்பிடுவது மிக நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
காளானில் பொட்டாசியம், மினரல்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய கோளாறு பிரச்சனையையும் குறைக்கும். மேலும், காளான் இரத்த நாளங்களை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி:
காளான்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் பிற பூஞ்சை தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.
நீரிழிவு பிரச்சனை:
காளானில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் சிறந்த உணவாக கருதப்படுகிறது. மேலும் இது உடலில் இன்சுலின் உற்பத்திக்கும் உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
வயிற்றுக்கு நன்மை தரும்:
காளான்களை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். காளானில் உள்ள போலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகிறது.
ALSO READ: Paralympics: பாராலிம்பிக்கில் மிரட்டிய 7 மாத கர்ப்பிணி.. வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைப்பு!
மூளை ஆரோக்கியம்:
காளான்களை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை உயிரியக்க மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றை உட்கொள்வதால் மூளையின் செயல்பாடு மேம்படும். காளானில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவற்றை உட்கொள்வதால் மூளை மற்றும் அதன் நரம்புகளில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைகிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)