5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health tips: ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே!

Mens Health: பொதுவாக ஒரு மனிதன் பாலியல் தூண்டுதலுக்கு ஆளாகும்போது, ​​​​அவர் தனது பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையை உணர்கிறார். இதன்மூலம், மூளைஇரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்தரங்க உறுப்புகளின் நரம்புகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. இது விறைப்பு என்று அழைக்கப்படுகிறது. இவை, சரியாக நிகழாததே விறைப்பு குறைப்பாடு அல்லது ஆண்மை குறைவு என்று அழைக்கிறோம்.

Health tips: ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே!
ஆண்மைக்குறைவு (image: vitranc/E+/Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Sep 2024 19:11 PM

ஆண்மைக்குறைவு: ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவு பிரச்சனை விறப்பு குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை. எப்போது வரும், யாருக்கு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருப்பினும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஒரு மனிதன் பாலியல் தூண்டுதலுக்கு ஆளாகும்போது, ​​​​அவர் தனது பிறப்புறுப்பில் விறைப்புத்தன்மையை உணர்கிறார். இதன்மூலம், மூளைஇரத்த ஓட்டத்தை அதிகரித்து, அந்தரங்க உறுப்புகளின் நரம்புகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகிறது. இது விறைப்பு என்று அழைக்கப்படுகிறது. இவை, சரியாக நிகழாததே விறைப்பு குறைப்பாடு அல்லது ஆண்மை குறைவு என்று அழைக்கிறோம். ஆண்களில் ஆண்மைக்குறைவு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: உடலுறவின் போது இந்த பழக்கங்கள் மனநிலையை கெடுக்கும்.. இதையெல்லாம் மாற்றி கொள்ளுங்கள்!

ஆண்மைக்குறைவுக்கான காரணங்கள் என்ன?

உடல் பிரச்சனை:

உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படுகிறது. இது தவிர, இரத்த அழுத்த மருந்துகள் மற்றும் கீமோதெரபி மருந்துகள் எடுத்துகொள்வதாலும் ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படுகிறது.

உளவியல் பிரச்சனை:

பதட்டம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சனைகளும் ஆண்மைக்குறைவு பிரச்சனை ஆண்களுக்கு ஏற்படுகிறது. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மட்டுமில்லாமல், மனதையும் ஆரோக்கியமாக பார்த்து கொள்வது மிக மிக முக்கியம்.

தீய பழக்கங்கள்:

அதிக அளவில் மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப்பொருள் போன்றவற்றை எடுத்துக்கொள்வதாலும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படுகிறது. முடிந்தவரை இவற்றை புறம் தள்ளுவது உங்களது பாலியல் வாழ்க்கை நன்மைகளை தரும்.

முதுமை:

ஆண்கள் வயதாகும்போது, ​​அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் இயற்கையான வீழ்ச்சியை சந்திப்பார்கள். இதுவும் ஆண்மைக்குறைவு பிரச்சனையை உண்டாக்கும்.

நரம்பியல் பிரச்சனை:

பார்கின்சன் நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற சில நரம்பியல் நிலைகளும், விறைப்புத்தன்மையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிப்பதன் மூலம் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.

ALSO READ: Health Tips: பாலியல் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

இதுதவிர, அதிகபடியான சுய இன்பம், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை, அதிக நேரம் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்த்தால் உள்ளிட்ட சில காரணங்களாலும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சனை ஏற்படலாம். நீங்களும் ஆண்மைக்குறைவு பிரச்சனையை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரிடம் பேசி, அதற்கான சிகிச்சை பெற்று கொள்வது நல்லது. மருத்துவர்கள் சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால், இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News