5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

Aam Doi: மாம்பழத்தை நேரடியாக சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸ் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வோம். அதேபோல், மாங்காயில் சட்னி, ஊறுகாய் போன்றவற்றையும் செய்து மக்கள் உணவாக எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் ரசகுல்லா, லட்டு போன்ற இனிப்புகளை சாப்பிட்டு வெறுத்துவிட்டீர்கள் என்றால், மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ருசியான ஆம் தோய் என்று அழைக்கப்படும் பெங்காலி உணவை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!
மாம்பழ தோய் (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 12 Sep 2024 15:28 PM

மாம்பழ தோய்: இந்தியாவில் மாம்பழம் என்றால் அனைவருக்கும் உயிர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அதன் சுவை அனைவரையும் கவரும். மாம்பழம் ஒரு வகையில் உங்களது உடலுக்கு சூடு தந்தாலும், மாம்பழ சீசனுக்காக பலர் வெறிகொண்டு காத்திருப்பார்கள். மாம்பழத்தை நேரடியாக சாப்பிடுவதற்கு பதிலாக ஜூஸ் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வோம். அதேபோல், மாங்காயில் சட்னி, ஊறுகாய் போன்றவற்றையும் செய்து மக்கள் உணவாக எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் ரசகுல்லா, லட்டு போன்ற இனிப்புகளை சாப்பிட்டு வெறுத்துவிட்டீர்கள் என்றால், மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ருசியான ஆம் தோய் என்று அழைக்கப்படும் பெங்காலி உணவை எடுத்துக்கொள்ளலாம். இது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும். இந்த உணவில் சிறப்பு என்னவென்றால், இதை செய்ய நீங்கள் அதிகமாக கஷ்டப்பட தேவையில்லை. மூன்று பொருட்கள் இருந்தால் போதும், இந்த சுவையான இந்த டிஷ் உங்கள் கைகளில் இருக்கும்.

ALSO READ: Foods to Avoid in Fever: காய்ச்சல் நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

மாம்பழ தோய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

மாம்பழ தோய் தயாரிக்க உங்களுக்கு இரண்டு முழு மாம்பழங்கள், மூன்று முதல் நான்கு கப் பால், இரண்டு கப் புளிப்பு தயிர், போதுமான சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் போன்றவை போதுமானது.

தயாரிக்கும் முறை:

  1. ஆம் தோய் என்று அழைக்கப்படும் மாம்பழ தோய் தயாரிக்கும் முறை மிகவும் எளிதானது. முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்க கேஸில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்சவும். அதன்பின், பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் காய்ச்சி நன்றாக சுண்டவிடவும். இதற்கு பிறகு, தனியாக வைத்து குளிர விடவும்.
  2. கடையில் இருந்து வாங்கிய பழுத்த மாம்பழங்களை நன்கு உரிக்க வேண்டும். மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இப்போது வீட்டில் தயிருடன் காய்ச்சப்பட்ட பாலைக் கலந்து கொள்ளவும். நீங்கள் விரும்பினால் சிறிது ஏலக்காய் தூளை சேர்த்து கொள்ளலாம்.
  3. தொடர்ந்து காய்ச்சிய பாலுடன் தயிர் சேர்த்தபின் அரைத்து வைத்த மாம்பழ சாறை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும். பால் மிகவும் சூடாக இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள். அதன்பின், ஒரு பாத்திரத்தில் சிறுதி தயிர் தடவி, மாம்பழ பால் கலவையை ஊற்றி கொள்ளவும்.
  4. பாத்திரத்தை நன்றாக மூடி, 5 முதல் 7 மணி நேரம் செட் ஆக விடுங்கள். அது செட் ஆனதும் அந்த கலவையை குளிர்சாதன பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைக்கவும், அதனால் அது குளிர்ச்சியடைந்து நீங்கள் சாப்பிட தயாராக இருக்கும். இப்போது, நீங்கள் ஒரு ஸ்பூன் எடுத்து உங்கள் குடும்பத்தினருடன் ஐஸ்கிரீம் போல், மாம்பழ தோயை உண்டு மகிழலாம்.

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை பராமரித்து முகப்பருக்களை போக்க உதவுகிறது.
  • மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • மாம்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • மாம்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த கூறுகள் உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை தருகிறது.
  • மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் மற்றும் அமீபாவை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது.
  • மாம்பழத்தில் உள்ள கரோட்டின் கண்களுக்கு நன்மை பயக்கும்.
  • மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் உணவை உடைக்க உதவுகிறது.
  • மாம்பழ விதையில் உள்ள நார்ச்சத்துகள் உடலில் உள்ள கூடுதல் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

ALSO READ: Health Benefits Of Dates: பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுகோங்க!

மாம்பழம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  • மாம்பழத்தை பகல் மற்றும் மதிய நேரத்தில் சாப்பிட சிறந்த நேரமாகும்.
  • மாலை 5 மணிக்கு மேல் மாம்பழம் சாப்பிடக்கூடாது.
  • அதேபோல், காலையில் உணவாக மாம்பழத்தை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Latest News