Thyroid Problem: தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா..? இந்த சமையலறை பொருட்கள் பெரிதும் உதவும்..!
Hypothyroidism: ஹைப்போ தைராய்டிசம் என்பது செயலற்ற தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு தைராய்டு ஹார்மோன் போதுமான அளவு இல்லாதபோது இது நிகழ்கிறது. அதேநேரத்தில், உடலி தைராய்சு ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யும்போது ஹப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த ஹைப்போ தைராய்டிசம் காரணமாகதான், பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் அடைகிறார்கள்.
தைராய்டு பிரச்சனை பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். சமீப காலமான தைராய்சு பிரச்சனையால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. தைராய்டு சுரப்பி நமது கழுத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவி செய்கிறது. தைராய்சு என்பது கழுத்தில் இருக்கும் ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இது தைராக்ஸின் (டி4) மற்றும் ட்ரையோடோதைரோனைன் (டி3) என்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த தைராய்டு பிரச்சனை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஹைப்போ தைராய்டிசம் மற்றொன்று ஹப்பர் தைராய்டிசம்.
ஹைப்போ தைராய்டிசம் என்பது செயலற்ற தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு நபருக்கு தைராய்டு ஹார்மோன் போதுமான அளவு இல்லாதபோது இது நிகழ்கிறது. அதேநேரத்தில், உடலி தைராய்சு ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யும்போது ஹப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த ஹைப்போ தைராய்டிசம் காரணமாகதான், பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் அடைகிறார்கள்.
ALSO READ: Food Recipes: 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 2 சூப்பர் ரெசிபி.. சூடான சோறுடன் சாப்பிட ஜோராக இருக்கும்!
பொதுவாக தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. தைராய்டு காரணமாக பெண்களுக்கு உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய், சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்று வீட்டிலேயே இயற்கை முறையில் எப்படி தைராய்டு பிரச்சனையை சரி செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லி விதைகள்:
கொத்தமல்லியில் இயற்கையாகவே தைராய்டை கட்டுப்படுத்தும் குணங்கள் உள்ளது. தைராய்டை கட்டுப்படுத்த தினமும் இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் எழுந்தவுடன் இதை குடிப்பதன்மூலம் தைராய்டு அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். மேலும், இது உங்களது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவி செய்யும்.
பச்சை கொத்தமல்லி ஜூஸ்:
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி ஆகியவை நிறைந்துள்ளன. இவை தைராய்டு அளவைக் கட்டுப்படுத்தவும், தைராய்டு அளவை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகிறது. தைராய்டு தொடர்பான பிரச்சனையின்போது எலும்புகளில் தாங்க முடியாத வலி ஏற்படும். அதிலிருந்து நிவாரணம் அளிக்க கொத்தமல்லி ஜூஸ் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், கொத்தமல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடல் செல்களைப் பாதுகாக்க உதவுகிறது.
துளசி மற்றும் கற்றாழை:
துளசி மற்றும் கற்றாழை இரண்டு சக்தி வாய்ந்த இலைகள். இவை இரண்டிலும் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. துளசி இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு உள்ளன. இவை தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் ஹைப்பர் தைராய்டு நோயாளிகள் மட்டுமே இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
துளடி இலையின் சாறு தைராய்டு சம்பந்தமான நோய்கள் நீங்கும். இரண்டு ஸ்பூன் துளசி சாற்றில் ஒரு ஸ்பூன் கற்றாழை சாறு கலந்து ஜூஸ் போல் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றை தொடர்ந்து குடிப்பதன்மூலம், தைராய்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்:
தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் மருந்ததாக தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் தைராய்டு சுரப்பிக்கு நன்றாக வேலை செய்கின்றன. மேலும், தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடல் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடல் எடையை குறைக்கவும் உதவி செய்கிறது.
வைட்டமின் டி குறைபாடு:
வைட்டமின் டி குறைபாடு தைராய்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்தே கிடைக்கிறது. இது நோய்களை எதிர்த்து போராடும் திறனை மேம்படுத்தும். அதேபோல், வைட்டமின் டி சில உணவுகளில் உள்ளது. இவற்றை எடுத்துக்கொள்வதும் தைராய்டு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும். அந்தவகையில், நீங்கள் ஆரஞ்சு ஜூஸ், எள், பால் பொருட்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் இருந்து வைட்டமின் டி கிடைக்கும். மேலும், உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைபடி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
பாதாம்:
தைராய்டு ஆரோக்கியத்திற்கு பாதாம் சிறந்தது. பாதாமில் புரதம், நார்ச்சத்து, மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் பாதாமில் உள்ள செலினியம் தைராய்டுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்தாகும். பாதாமில் உள்ள மெக்னீசியம் தைராய்டு சுரப்பியை சீராக செயல்பட உதவி செய்கிறது