5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: சுவைமிக்க தேங்காய் பால் ரசம் செய்ய ஆசையா..? உங்களுக்கான ரெசிபி இதோ..!

Thengai Paal Rasam: ரசம் என்பதும் இந்த தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. என்ன சமைப்பது என்று தெரியாத பெண்கள், யோசிப்பதை நிறுத்திவிட்டு டக்கென்று 10 நிமிடத்தில் ரசத்தை வைத்துவிடுகிறார்கள். ரசத்தில் தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம் போன்ற பலவகை ரசங்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜீரணிக்க தயாரிக்கப்பட்ட ரசம், ஒரு உணவு பொருளாகவே மாறிவிட்டது. அந்தவகையில், இன்று வித்தியாசமான முறையில் எளிதாக தேங்காய் பால் ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipes: சுவைமிக்க தேங்காய் பால் ரசம் செய்ய ஆசையா..? உங்களுக்கான ரெசிபி இதோ..!
தேங்காய் பால் ரசம் (Image: Freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 26 Sep 2024 12:05 PM

சமையலிலும், சாப்பிடுவதலிலும் மக்கள் தினசரி புதியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாகவே, ஆன்லைனில் புது புது ரெசிபிகளை தேடி தேடி சமைக்கின்றன. ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது சாம்பார், புளி குழம்பு உள்ளிட்டவற்றை நாம் சாப்பிட்டுவோம். இது தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் சலிப்பை கொடுத்துவிடுவோம். ரசம் என்பதும் இந்த தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. என்ன சமைப்பது என்று தெரியாத பெண்கள், யோசிப்பதை நிறுத்திவிட்டு டக்கென்று 10 நிமிடத்தில் ரசத்தை வைத்துவிடுகிறார்கள். ரசத்தில் தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம் போன்ற பலவகை ரசங்கள் உள்ளன. ஒரு காலத்தில் ஜீரணிக்க தயாரிக்கப்பட்ட ரசம், ஒரு உணவு பொருளாகவே மாறிவிட்டது. அந்தவகையில், இன்று வித்தியாசமான முறையில் எளிதாக தேங்காய் பால் ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் பிரியாணி வேண்டுமா..? உங்களுக்காக ஈஸி ரெசிபி..!

தேங்காய் பால் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

தக்காளி – 2
புளி – லெமன் சைஸ்
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – அரை லிட்டர்
எண்ணெய் – தேவையான அளவு
வெந்தயம் – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்

தேங்காய் பால் ரசம் செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு இடிக்கும் கல் அல்லது மிக்ஸியில் 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் 4 பல் பூண்டை தட்டி எடுத்து கொள்ளவும்.
  2. அதற்குபிறகு, ஒரு பாத்திரத்தில் இரண்டு தக்காளி, லெமன் சைஸ் அளவில் எடுத்துவைத்துள்ள புளி ஆகிவற்றை ஒன்றாக போட்டு வெறும் கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. தொடர்ந்து, தேங்காயை நன்றாக பொடி பொடியாக ஒட்டி ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.
  4. நன்றாக அரைத்தபின், அந்த அரைத்த தேங்காயை நன்றாக வடிகட்டி அதிலிருந்து தேங்காய் பாலை எடுத்து கொள்ளுங்கள்.
  5. தக்காளி மற்றும் புளியை பிசைந்து வைத்த பாத்திரத்தில் அரைத்த தேங்காய் பால் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஊற்றி மீண்டும் நன்றாக கரைக்கவும்.
  6. அடுப்பில் இப்போது ஒரு பாத்திரத்தை வைத்து சூடாக்கி அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இரண்டு வர மிளகாய், சிறியதாக நறுக்கிய வெங்காயம், அரைத்து எடுத்து வைத்த மிளகு, சீரக கலவை அதில் போடவும்.
  7. சிறிது வதக்கியபின், கலக்கி வைத்த தேங்காய் பால் கலவையை பாத்திரத்தில் ஊற்றி மெல்ல கலக்கி விடவும்.
  8. தொடர்ந்து, சிறிதளவு தேங்காய் பாலை ஊற்றி லேசாக கொதி வந்தவுடன் இறக்கி, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் அருமையான தேங்காய் பால் ரசம் ரெடி.

ALSO READ: Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!

மற்றொரு செய்முறை:

  1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான நெருப்பில் வதக்கி தனியாக எடுத்து வையுங்கள்.
  2. இவற்றின் சூடு சிறிது ஆறியதும் மிக்ஸி பயன்படுத்தி அரைத்துக்கொள்ளவும்.
  3. பின் அதே கடாயில் தக்காளி, கடுகு, பெருங்காயம், இஞ்சி, தேவையான அளவூப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  4. இதனுடன் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலக்க வேண்டும். சில நிமிடங்களில் கலவை கொதி நிலைக்கு வந்ததும், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவவும்.
  5. இப்போது உங்களுடன் சுவைமிக்க தேங்காய் பால் ரசம் தயாராகிவிட்டது. இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

தேங்காய் பாலின் நன்மைகள்:

  • தேங்காய் பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
  • தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • தேங்காய் பாலில் உள்ள துத்தநாகம் குடல் சுவர்களை புதுப்பித்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை தடுக்கிறது.
  • தேங்காய் பாலில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • தேங்காய் பாலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி மற்றும் தசை வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
  • தேங்காய் பாலில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • தேங்காய் பாலில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Latest News