5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mutton Pepper Fry: கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்து பாருங்கள், டேஸ்ட் உண்மையில் வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால், இந்த ரெசிபி செய்வதற்கு நாம் தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்தப் போகிறோம். அதுமட்டுமல்லாமல், மசாலாப் பொருட்களும் அதிகமாக சேர்க்கிறோம். குறிப்பாக, பெப்பர் சேர்ப்பதால் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்கும். தற்போது, கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Mutton Pepper Fry: கேரளா ஸ்டைலில் மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி?
மட்டன் பெப்பர் ஃப்ரை
intern
Tamil TV9 | Updated On: 30 Jul 2024 08:42 AM

மட்டன் பெப்பர் ஃப்ரை : எப்பவும் ஒரே மாதிரி மட்டன் கிரேவி/சுக்கா செய்வதற்கு பதிலாக, கேரளா ஸ்டைலில் செய்து பாருங்கள். டேஸ்ட் உண்மையில் வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால், இந்த ரெசிபி செய்வதற்கு நாம் தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்தப் போகிறோம். அதுமட்டுமல்லாமல், மசாலாப் பொருட்களும் அதிகமாக சேர்க்கிறோம். குறிப்பாக, பெப்பர் சேர்ப்பதால் ஒரு தனித்துவமான சுவையை கொடுக்கும். தற்போது, கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Also Read: Rava Cake: வீட்டில ரவை இருந்தா இந்த கேக் செஞ்சிப் பாருங்க..

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • ஆட்டிறைச்சி (மட்டன்) – 1/2 கிலோ
  • சீரக தூள் – 1 ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
  • இஞ்சி, பூண்டு விழுது – 11/2 ஸ்பூன்
  • தயிர் – 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகு தூள் (பெப்பர் பவுடர்) – 5 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1 ஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

மட்டன் பெப்பர் ஃப்ரை செய்முறை:

மட்டன் பெப்பர் ஃப்ரை செய்வதற்கு, முதலில் மட்டனை நன்றாக கழுவி, ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, 5 முதல் 6 விசில் விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை போகும்வரை நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும், வேக வைத்த மட்டனை சேர்த்து அதிலிருக்கும் தண்ணீர் ஆவியாகும் நன்றாக சமைக்கவும்.

Also Read: டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்..!

இப்போது எடுத்து வைத்துள்ள, மிளகு தூள், கொத்தமல்லி தூள், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

கேரளா ஸ்டைல் மட்டன் பெப்பர் ஃப்ரை ரெடி, சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Latest News