5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rava Kesari: மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..

கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரி பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும். வாசனையே பிரமாதமாக இருக்கும். சுவையோ ம்ம்ம்ம்... இவ்வளவு தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்க அதில் என்ன தான் சேர்க்கிறார்களோ என்று பலரும் யோசிப்போம். அந்த சீக்ரெட் பொருளை தான் இந்த குறிப்பில் கூறியுள்ளோம். மறாக்காமல் வீட்டில் செய்து பாருங்க.

Rava Kesari: மிருதுவான கல்யாண வீட்டு கேசரி.. இந்த ஒரு பொருள் மறக்காம சேர்க்கணும்..
intern
Tamil TV9 | Updated On: 26 Jul 2024 00:37 AM

என்னதான் நாம் வீடுகளில் கேசரி செய்தாலும், கல்யாண வீட்டு கேசரிக்கு அப்படி ஒரு மவுஸு. கல்யாண வீடுகளில் உணவு பந்தியின் போது கேசரி வைப்பார்கள். அந்த கேசரியை பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும். வாசனையே பிரமாதமாக இருக்கும். சுவையோ ம்ம்ம்ம்… இவ்வளவு தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்க அதில் என்ன தான் சேர்க்கிறார்களோ என்று பலரும் யோசிப்போம். அந்த சீக்ரெட் பொருளை பயன்படுத்தி தான் தற்போது கல்யாண வீட்டு கேசரி செய்ய போகிறோம். இந்த முறைகளை பின்பற்றினால், நீங்களும் சுவையான மிருதுவான கல்யாண வீட்டு கேசரியை வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்துவிடலாம். மறாக்காமல் வீட்டில் செய்து பாருங்க. 

Also Read: Social Media and Sleep: தூக்கத்தை கெடுக்கும் சோஷியல் மீடியா.. ஷாக் ரிப்போர்ட் என்ன தெரியுமா?

தேவையான பொருட்கள்:

  • ரவை – 1 கப்
  • நெய் – 100 மில்லி
  • சர்க்கரை – 2 கப்
  • ஏலக்காய் – 5
  • முந்திரிப் பருப்பு – 8
  • உலர்ந்த திராட்சை – 8
  • கேசரி பவுடர் – 1/4 ஸ்பூன்
  • பன்னீர் – 3 ஸ்பூன் (சீக்ரெட் பொருள்)

செய்முறை:

முதலில் ரவை எந்த கப்பில் எடுக்கிறோமோ, அதே கப்பில் 3 கப் தண்ணீரை அளந்து எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், எடுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது, அதே நெய்யில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து நன்றாக வறுக்கவும். ரவை ஓரளவு நிறமாறியதும், கொதிக்க வைத்த தண்ணீரை ரவையில் ஊற்றி, கட்டியில்லாமல் நன்றாக கிளறிவிடவும்.

கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும், ரவை நன்றாக வெந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். முக்கால் பதத்திற்கு வெந்ததும், கேசரி பவுடரை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்.

கூடவே பன்னீரையும் சேர்த்து, நன்றாக கிளறவும். இடையிடையே நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் சேர்த்து, கிளறிக் கொண்டே இருக்கவும். கேசரி வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்க்கவும்.

பிறகு, 1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 5 ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் நன்றாக பவுடர் செய்து, கேசரியில் கொட்டி கிளறிக் கொண்டே இருக்கவும். கேசரி பாத்திரத்தில் ஓட்டாமல் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும். சுவையான கல்யாண வீட்டு கேசரி ரெடி.

Also Read: Sweet Recipe: வீட்டில் கடலை மாவு இருந்த இந்த ஸ்வீட் செய்து பாருங்க.. பாகு பதம் தேவையில்லை.

 

டிப்ஸ்:

தேவைப்பட்டால் பன்னீருக்கு பதிலாக அன்னாசி எசன்ஸ் 2 சொட்டு விட்டுக்கொள்ளலாம்.

சர்க்கரை மற்றும் ஏலக்காயை பவுடர் செய்யும்போது கூடவே 5 முந்திரையையும் சேர்த்து பவுடர் செய்து சேர்க்கலாம், சுவையை அதிகரிக்கும்.

Latest News