5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MS Dhoni: சம்பளம் பாதியாக குறைப்பு.. ஐபிஎல் 2025ல் தோனி வாங்கபோகும் சம்பளம் இவ்வளவுதானா..?

IPL 2025: 43 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தோனி ஐபிஎல் 2024ல் கேப்டன் பதவியில் இருந்து விலகி சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். ஐபிஎல் 2024ல் தோனி ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கிய போதெல்லாம் ரசிகர்களின் ஆராவாரத்தால் ஸ்டேடியம் அதிர தொடங்கியது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

MS Dhoni: சம்பளம் பாதியாக குறைப்பு.. ஐபிஎல் 2025ல் தோனி வாங்கபோகும் சம்பளம் இவ்வளவுதானா..?
எம்.எஸ்.தோனி
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Sep 2024 08:59 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் 2025ல் விளையாட வேண்டும் என்று ஒவ்வொரு தோனி ரசிகர்களும் கனவு கண்டு வருகின்றனர். இருப்பினும், ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை. இப்படி இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளார். இதன் காரணமாக தோனி மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். ஐபிஎல் 2025 தொடங்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பற்றிய பேச்சுகளே இணையத்தில் அதிகமாக உள்ளது.

ALSO READ: IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!

அப்படி என்ன செய்தார் தோனி..?

வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐபிஎல் 2025க்கான கட்டணத்தை தோனி குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025க்காக சென்னை சூப்பர் கிங்ஸிடம் இருந்து எம்.எஸ்.தோனி இப்போது ரூ.6 கோடி மட்டுமே வாங்க இருக்கிறார்.

அதேநேரத்தில், ஐபிஎல் 2025க்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் மதிஷா பத்திரனா ஆகியோரை தக்கவைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் தயாராகி வருவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைக்க அனுமதிக்கப்பட்டால், 6 கோடி சம்பளத்துடன் சென்னை அணிக்காக விளையாடலாம். அதேநேரத்தில், தோனி தக்கவைக்க அனுமதிக்கப்படாவிட்டால், சென்னை தனது திட்டங்களை மாற்றி வழிகாட்டியாக நியமிக்கலாம்.

ஒரு அணி எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம்..?

ஐபிஎல்லில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் வருகின்ற நவம்பர் 15ம் தேதி முன் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல்லில் பழைய விதிகளின்படி, மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலையில், மீதமுள்ள அனைத்து வீரர்களும் வெளியேற்றப்படுவார்கள். இருப்பினும், இந்த முறை இந்த விதிகளில் சில மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்த பிசிசிஐ – ஐபிஎல் கூட்டத்தில் அனைத்து அணிகளும் 4 வீரர்களுக்கு பதிலாக 5 வீரர்களை தக்கவைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

புது விக்கெட் கீப்பரை தேடும் சிஎஸ்கே:

43 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். தோனி ஐபிஎல் 2024ல் கேப்டன் பதவியில் இருந்து விலகி சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். ஐபிஎல் 2024ல் தோனி ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கிய போதெல்லாம் ரசிகர்களின் ஆராவாரத்தால் ஸ்டேடியம் அதிர தொடங்கியது. இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணி தோனியை தக்கவைக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐபிஎல் 2025ன் மெகா ஏலத்தில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சிக்கும். தோனியின் உடற்தகுதி இப்போது முன்புபோல் இல்லை. தோனி ஒருவேளை ஐபிஎல் 2025ல் விளையாடினால் இம்பேக்ட் பிளேயராகவே களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.

ALSO READ: On This Day In 2007: கம்பீரின் அசத்தல் பேட்டிங்.. தோனி மாஸ்டர் மைண்ட்.. 2007 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நாள் இன்று!

கடந்த சீசனில் தோனியின் ஆட்டம் எப்படி இருந்தது?

எம்.எஸ்.தோனி ஐபிஎல் 2024ல் பெரும்பாலான போட்டிகளில் கடைசி மற்றும் கடைசிக்கு முந்தைய ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். கடந்த சீசனில் மொத்தமாக 73 பந்துகளை சந்தித்த தோனி, 220 ஸ்டிரைக் ரேட்டில் 161 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக அவர் எடுத்த 37 ரன்கள்தான் அவரது அதிகபட்ச ஸ்கோர். அவரது சராசரி 53க்கும் அதிகமாக இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சீசனில் தோனிக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி ஏற்றார். இருப்பினும், கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

Latest News