International Jaguar Day 2024: சர்வதேச ஜாகுவார் தினம்.. தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Jaguar: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 29ஆம் தேதி சர்வதேச ஜாகுவார் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜாகுவார்கள் சந்திக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாகவும் ஜாகுவார் சுற்றுச்சூழலின் சின்னமாக அங்கீகரிக்கப்படுவதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நவம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சர்வதேச ஜாகுவார் தினத்தை கொண்டாடுகிறார்கள். இது காடுகளில் உள்ள அரிதான இனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கம்பீரமான ஜாக்குவாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறந்த நாளாகும். பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையின் சின்னமான ஜாகுவார்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அரிதான மிகப் பெரிய காட்டுப் பூனைகள் என்று அழைக்கப்படும் ஜாகுவரை பாதுகாப்பது மட்டும் இதன் நோக்கமல்ல. ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜாகுவரை பற்றிய விழிப்புணர்வுக்காக தான் இந்த நாள்.
இந்த சர்வதேச ஜாகுவார் தினம், காடுகளை அழிப்பதை குறைத்தல் மற்றும் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே சக வாழ்வை ஊக்குவித்தல் போன்ற செயல்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. அதிகரித்து வரும் ஜாகுவார் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் அதன் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் முக்கியமான பாதுகாப்பு முயற்சியில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்:
ஜாகுவார் அமெரிக்காவின் மிகப்பெரிய காட்டுப் பூனையான ஜாகுவார் பல்லுயிர் பாதுகாப்பிற்கான இனமாகவும் நிலையான வளர்ச்சிக்கான சின்னமாகும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார பாரம்பரியமாகவும் கொண்டாடப்படுகிறது.
Also Read: சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
இது உலகில் இருக்கக்கூடிய காட்டுப் பூனைகளில் மூன்றாவது பெரிய வேட்டையாடும் இனமாகும். மேலும் இது அமேசான் மழைக்காடுகளில் வாழும் முக்கியமான இனமாகும். சர்வதேச ஜாகுவார் தினம், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பரந்த முயற்சிகளில் ஒரு பகுதியாக ஜாகுவார் தாழ்வாரங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை கவனத்தில் கொள்ள, ஜாகுவார் வாழும் நாடுகளில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் இணைந்து ஜாகுவார்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்கு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
ஜாகுவார் வாழிடம்:
ஜாகுவார் பெரும்பாலும் சிறுத்தைகள் என்று தவறாக கருதப்படுகிறது. ஆனால் உடம்பில் இருக்கும் புள்ளிகள் அவற்றை வேறுபடுத்துகின்றது. பொதுவாக பூனைகள் தண்ணீரை தவிர்க்கும். ஆனால் ஜாகுவார் சிறப்பாக நீச்சல் அடிக்கும் மேலும் இது பனாமா கால்வாய் நீந்துவதாக சொல்லப்படுகிறது.
ஜாகுவார் ஒரு காலத்தில் மத்திய அர்ஜென்டினாவில் இருந்து தென்மேற்கு அமெரிக்கா வரை பரந்த அளவில் வாழ்ந்து வந்தது. 1880 ஆம் ஆண்டுகளில் பாதிக்கு மேற்பட்ட ஜாகுவார்கள் தங்கள் பிரதேசத்தை இழந்தது. இப்பொழுது ஜாகுவர்களின் முக்கிய கோட்டையாக அமேசான் பேசின் தெரிகிறது. இருப்பினும் மத்திய அமெரிக்காவில் சிறிய எண்ணிக்கையில் இந்த ஜாகுவார்கள் வாழ்ந்து வருகிறது. இந்த ஜாகுவார்கள் பொதுவாக வெப்பமண்டல மழை காடுகளில் காணப்படுகிறது. மேலும் சவான்னா மற்றும் புல்வெளிகளில் வாழ்கிறது.
ஜாகுவாரின் அமைப்பு:
புலிகள் மற்றும் சிங்கங்களுக்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய பூனை ஜாகுவார். ஜாகுவார் கிட்டத்தட்ட 2.5 மீட்டர் நீளத்திலும் 113 கிலோ எடை உள்ளதாகவும் இருக்கும். இந்த உடலமைப்பை கொண்டு பெரிய இரையை வேட்டையாடுகிறது. ஜாகுவார் சிறுத்தை போன்ற தோற்றத்துடன் பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். மேலும் இதன் மேல் இருக்கும் புள்ளிகள் ரோசெட்டுகள் என்று அழைக்கப்படுகிறது.
ஜாகுவர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள்:
உணவு பண்ணை தொழிற்சாலைகள், கால்நடை பண்ணைகள் போன்ற பெரிய அளவிலான விவசாயத்திற்காக செய்யப்பட்ட காடு அழைப்புகளில் ஜாகுவார் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜாகுவார் உயிர் வாழ்வதற்கான சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையாக அணைகள் கட்டப்பட்டது ஜாகுவர்கள் கடுமையாக பாதித்தது. விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பதற்காக ஜாக்குவர்களை வேட்டையாடி வருவது ஜாக்குவார்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாரம்பரிய ஆசிய மருத்துவத்திற்காக ஜாகுவாரின் தோல், நகம், பற்கள் மற்றும் பிற பாகங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை லாபம் தேடும் நோக்கில் சட்டவிரோதமாக கொடூரமாக வேட்டையாடப்படுகிறது.
Also Read: National Expresso Day: தினமும் எஸ்பிரெசோ காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
பாதுகாப்பு:
ஜாகுவார் காணப்படும் ஒவ்வொரு நாட்டிலும் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டுள்ளது. மேலும் இந்தப் பகுதிகளில் வர்த்தகம் செய்ய CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.