5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

International Coffee Day 2024: காபியின் வெறித்தனமான காதலரா நீங்கள்..? அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!

Coffee Benefits: காபியில் ரைபோஃப்ளேவின் (வைட்டமின் பி2), நியாசின் (வைட்டமின் பி3), மெக்னீசியம், பொட்டாசியம், பல்வேறு பினோலிக் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. சுகாதரா நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஊட்டச்சத்துக்கள் மனித உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். அந்தவகையில், இன்று காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

International Coffee Day 2024: காபியின் வெறித்தனமான காதலரா நீங்கள்..? அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க..!
காபி (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 01 Oct 2024 11:21 AM

இந்திய மக்களுக்கு டீ அல்லது காபி இல்லாமல் காலை பொழுது உதயம் ஆகாது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த இரண்டு சூடான பானங்களுடன் தங்கள் நாளை தொடங்குகிறார்கள். சிலருக்கு டீ என்றால் பைத்தியம். சிலருக்கு காபி என்றால் பைத்தியம். அந்தவகையில், இன்று அதாவது அக்டோபர் 1ம் தேதி காபி பிரியர்களுக்கு சிறப்பான நாள். சர்வதேச காபி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக காபி அருந்தும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வெளியான ஒரு தகவலின்படி, இந்தியாவில் காபி உற்பத்தில் கடந்த சில ஆண்டுகளில் 5 முதல் 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கிறது. உண்மையில் பெட்ரோலியத்திற்கு அடுத்தபடியாக காபிக்கு உலகம் முழுவதும் அதிக தேவை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. காபியில் ரைபோஃப்ளேவின் (வைட்டமின் பி2), நியாசின் (வைட்டமின் பி3), மெக்னீசியம், பொட்டாசியம், பல்வேறு பினோலிக் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. சுகாதரா நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஊட்டச்சத்துக்கள் மனித உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். அந்தவகையில், இன்று காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Exclusive: மதிய உணவாக சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..? டாக்டர் கொடுத்த டிப்ஸ்!

சர்க்கரை நோய்:

தினமும் காபி குடிப்பதாக சர்க்கரை நோய் அபாயம் பெருமளவு குறையும் என்று கூறப்படுகிறது. காபி குடிப்பதாக டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லீரல்:

தினமும் காபி குடிப்பதன் மூலம் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவி செய்யும். காபி கல்லீரல் ஈரல் அழற்ஜி, கொழுப்பு கல்லீரல், கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதில் நன்மை பயக்கிறது. தொடர்ந்து, கல்லீரலை பாதுகாப்பதிலும் காபி உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மன ஆரோக்கியம்:

மன ஆரோக்கியத்திற்கு காபியானது நன்மை பயக்கும். காபி சாப்பிடுவதால் மூளை புத்துணர்ச்சி பெறுவது மட்டுமின்றி, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்க உதவி செய்யும். மேலும், காபியானது நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவி செய்யும் என்று கூறப்படுகிறது.

அல்சைமர் நோய்:

அல்சைமர் என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் நோயாகும். அதாவது, இந்த அல்சைமர் வயதானவர்களுக்கு நினைவாற்றலை பலவீனமடைய செய்யும். இதை, அல்சைமர் டிமென்ஷியா என்றும் அழைக்கப்படுகிறது. காபி சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோயை 65 சதவீதம் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்து, நாள் முழுவதும் மூளை மற்றும் நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திக்க காபி உதவுகிறது.

வீக்கத்தை குறைக்கும்:

காபியில் உள்ள் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் பல நோய்களுக்கு மூல காரணமான வீக்கத்தை குறைக்க உதவுகிறது. ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து, உடலுக்கு பாதிப்பில்லாத இரசாயனங்களாக மாற்றுகிறது.

ALSO READ: Olive Oil Benefits: ஆரோக்கியத்தின் பொக்கிஷம்.. ஆலிவ் எண்ணெயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

இதய ஆரோக்கியம்:

இன்றைய நவீன காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே இதயப் பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், காபி சாப்பிடுவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கிறது. அந்தவகையில், தினமும் ஒரு கப் காபி சாப்பிடுவது இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவி செய்யும். அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி தனது ஆராய்ச்சி ஒன்றில் காபி இதயத்திற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்துள்ளது.

எடை குறைப்பு:

காபி குடிப்பதன் மூலம் உடல எடையையும் குறைக்கலாம். காபி உங்கள் எடையை பராமரிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, அதிக அளவு காபி குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

வயிற்றுக்கு தொல்லை தரும் காபி:

காபி எந்த அளவிற்கு சில நன்மைகளை உடலுக்கு தருகிறதோ, சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். காபி சாப்பிடுவதால் வயிற்றில் அமிலம் உற்பத்தி ஆகிறது. அதவாது, காபியில் உள்ள காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டோமா அமிலத்தின் உற்பத்தியையும் ஏற்படுத்தும். இதன் காரணமாக செரிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பது அஜீரணம், வயிற்று வீக்கம், குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News