5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புதுக்கோட்டை சுற்றியுள்ள டூர் ஸ்பாட்கள்.. இந்த இடமெல்லாம் போய் இருக்கீங்களா?

Pudhukottai Trip: சோழர்கள், நாயக்கர்கள், தொண்டைமண்டல மன்னர்கள் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் பல நினைவுச் சின்னங்களின் உறைவிடமாய் திகழ்கிறது. முந்திரிக்கு புகழ் பெற்ற புதுக்கோட்டையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் ஏராளம் உண்டு.

புதுக்கோட்டை சுற்றியுள்ள டூர் ஸ்பாட்கள்.. இந்த இடமெல்லாம் போய் இருக்கீங்களா?
திருமயம் கோட்டை (Photo Credit: Wikipedia)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 30 Sep 2024 08:14 AM

தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது புதுக்கோட்டை மாவட்டம். இந்தப் புதுக்கோட்டை சோழர்கள் நாயக்கர்கள் தொண்டை மண்டல மன்னர்கள் ஆகியோரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததால் இந்த மூன்று மன்னர்களின் கட்டடக்கலை, புராதான சின்னங்கள் ஆகியவற்றுக்கு உறைவிடமாய் திகழ்கிறது இந்த புதுக்கோட்டை. இது தமிழகத்தின் 14வது மாவட்டமாக 1974 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் புகழ் மிக்க சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

திருமயம் கோட்டை:

1676 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. வட்ட வடிவில் அமைந்துள்ள இந்த கோட்டையில் ஏழு சுற்றுச்சூழல் இருந்துள்ளது. இந்தக் கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்துள்ளது. திருமயம் கோட்டைக்கு உள்ளே செல்ல தெற்கு கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நுழைவாய்கள் உள்ளன. இது புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

சித்தன்னவாசல்:

புதுக்கோட்டையில் வரலாற்றுச் சின்னங்களை சுமந்து நிற்கும் கிராமம்தான் சித்தன்னவாசல். சமணர்களின் புகழ்பெற்ற வரலாற்று சுவர் ஓவியங்கள் இங்குள்ள கொள்கைகளில் காணப்படுகிறது. சமணர் காலத்து ஓவியங்களான இவை கிபி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. சுமார் 700 மீட்டர் உயரம் கொண்ட இந்த குன்றுகள் மேல் சவணர்களின் படுக்கையும் தவம் செய்யும் இடமும் பல குடவறைகளும் காணப்படுகின்றன. புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

புதுக்கோட்டை அருங்காட்சியகம்:

தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்களில் இரண்டாவது பெரிய அருங்காட்சியமாக உள்ளது. இது 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பட்டது. இதில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், உலோக படிமங்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள், முதுமக்கள் தாழி என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

கோடிக்கரை கடற்கரை:

புதுக்கோட்டையில் இருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோடிக்கரை கடற்கரை. புதுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம் பயணித்து இந்த இடத்தை அடையலாம். இது நாகப்பட்டினம் மாவட்டத்தின் கீழ் வரும். இந்தக் கோடிக்கரை கடற்கரை இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் ஏற்ற இடம். இந்த கடற்கரை அருகில் ஒரு கோயிலும் இருக்கிறது. மேலும் அதன் அருகே சதுப்பு நிலக்காடு இருப்பதால் அங்கு சென்றும் இயற்கை அழகை ரசித்து வரலாம்.

Also Read: Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

தேனிமலை முருகன் கோவில்:

பொன்னமராவதியில் இருந்து காரையூர் வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த கோவில். இந்த மலையை சுற்றி தேனிகள் கூடு கட்டு வருகின்றன. இந்த மலையில் முருகனுக்கு பல படிகள் அமைத்து கோயில் கட்டியுள்ளனர். இங்கு பெருமானந்த சுவாமி என்ற சித்தரின் ஜீவ சமாதியும் இருக்கிறது. இந்த கோவிலில் அழகிய சுனைகளும் இருக்கின்றன. மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இடையில் இளைப்பாரிச் செல்ல மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளது.

நார்த்தாமலை:

இங்கு குன்றுகளில் கலை அழகு மிகுந்த பல கோயில்கள் உள்ளன. திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் இந்த ஊரில் பல சிறிய மலைகள், சிலைகள் நிறைந்த குகைகள் என பல வரலாற்று சுவடுகளை சுமந்து நிற்கிறது. இங்கு மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மை மலை, மண்மலை மற்றும் பொன்மலை என ஒன்பது குன்றுகள் உள்ளன. நகதீஸ்வரன் சிவன் கோயில், மங்களாம்பிகை அம்மன் கோயில், பிள்ளையார் கோயில், விஜயாலய சோழீஸ்வரம் கோயில் என பல கோயில்களை இங்கு வழிபடலாம்.

காட்டு பாவா பள்ளிவாசல்:

17 ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டு நவாப் கட்டிய புகழ்மிக்க இந்த பள்ளிவாசல் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

இது தவிர கோகர்னேஸ்வரர் கோயில், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆகியவற்றை காணலாம்.

Also Read: Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

Latest News