Oats Chilla: சர்க்கரை நோயாளிகளுக்கு சூப்பர் டிஸ்.. ஓட்ஸ் சில்லா வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
Sugar Patient: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் தினசரி உணவைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த நேரத்தில் வீட்டில் தயார் செய்யக்கூடிய உணவை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஓட்ஸ் சில்லா: நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோய் வேகமாக வளர்ந்து வரும் நோயாகும். இது வயதானவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் என அனைவரும் இந்த பிரச்சனையை சந்திக்கின்றனர். தவறான உணவு பழக்கம் மற்றும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை காரணமே நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. கணையத்தில் இன்சுலின் பற்றாக்குறையால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் இந்த உடல் நலப் பிரச்சனையில் உணவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இரத்த சர்க்கரை குறைவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை குறைவால் போராட வேண்டியிருக்கும். நீங்கள் உணவு தொடர்பான சில விதிகளை கடைபிடித்தால் அல்லது உங்கள் அன்றாட வழக்கத்தில் நல்ல பழக்கவழக்கங்களை மாற்றினால், இரத்த சர்க்கரையை பெரிய அளவில் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
ALSO READ: Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!
உயர் இரத்த சர்க்கரை காரணமாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்பார்வை முதல் சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. அதனால்தான் ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதும் தினசரி உணவைப் பராமரிப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் இன்று சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த நேரத்தில் வீட்டில் தயார் செய்யக்கூடிய உணவை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஓட்ஸ் சில்லா தயாரிக்க தேவையான உணவு:
நீரிழிவு நோயாளிகளுக்கு ஓட்ஸ் சீலா ஒரு சிறந்த உணவாகும். இந்த ஓட்ஸ் சில்லா தயாரிக்க நீங்கள் 1 கப் ஓட்ஸ், அரை கப் தயிர், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, மூன்று முதல் நான்கு பச்சை மிளகாய், பொடி பொடியாக நறுக்கிய பச்சை கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், உங்கள் தேவைகேற்ப மிளகாய் தூள், சிறிது எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு எடுத்து கொள்ளவும்.
தயாரிக்கும் முறை:
ஓட்ஸ் சில்லா தயாரிக்க மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து கொள்ளவும். அதன்பிறகு, ஒரு பாத்திரத்தில் ஓட்ஸை எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எடுத்த ஓட்ஸில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதன்பின், ஊறவைத்த ஓட்ஸில் தயிர், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மிளகாய் தூள், கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்து பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு நான் – ஸ்டிக் பாத்திரத்தை வைத்து கேஸில் வைத்து சூடாக்கவும். இப்போது கலக்கி வைக்கப்பட்ட ஓட்ஸை அந்த நான் – ஸ்டிக் பாத்திரத்தில் பரப்பி, மிதான சூட்டில் இருபுறமும் திருப்பி போட்டு வேக வைக்கவும்.
ALSO READ: Health tips: உற்சாகத்தையும் இளமையையும் கொட்டி தரும் நெல்லிக்காய்!
இப்போது உங்கள் காரத்திற்கு ஏற்ப அந்த ஓட்ஸில் எண்ணெய் தடவு மீண்டும் மீண்டும் இருபுறமும் திருப்பவும். உணவானது நன்றாக பொன்னிறமானதும், இரு தட்டில் எடுத்து வைத்து அதனுடன் சட்னி, சாம்பார் அல்லது தயிருடன் வைத்து பரிமாறவும். இத்தகைய உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை நீங்கள் காலை உணவு அல்லது மதிய உணவாக செய்து சாப்பிட கொடுக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவு எடுத்து கொள்ள வேண்டிய நேரம்:
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த காலை உணவை காலை 7 முதல் 8 மணிக்குள் சாப்பிடுங்கள். அதன்படி நீங்கள் எடுத்து கொள்ளும் உணவில் பெர்ரி, ஒரு முட்டை மற்றும் கிரீம் அல்லாத பால் மற்றும் முளைத்த தானியங்கள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் பழங்கள், உலர் பழங்கள் மற்றும் எலுமிச்சைப்பழம் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. இதேபோல், மாலை 4 முதல் 5 மணி மணிக்குள் காய்கறி சூப், ஒரு ஆப்பிள் அல்லது சர்க்கரை இல்லாத தேநீர் மற்றும் சர்க்கரை இல்லாத குக்கீகளை எடுத்து கொள்ளலாம்.