5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TV Screen Cleaning: எல்இடி ஸ்மார்ட் டிவியை இப்படி சுத்தம் பண்ணுங்க.. இல்லனா நஷ்டம் உங்களுக்குதான்!

Home Tips: சாதாரண டிவியாக இருந்தாலும் சரி, ஸ்மார்ட் டிவியாக இருந்தாலும் சரி, திரையில் தூசி மற்றும் கைரேகைகள் படிவது சகஜம். வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்வது போல் டிவி திரையை சுத்தம் செய்தால், உங்கள் எல்இடி டிவி பழுதடையலாம். உங்கள் வீட்டிலும் எல்இடி டிவி இருந்தால், அதை சுத்தம் செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் புதிய எல்இடி டிவியை மீண்டும் வாங்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

TV Screen Cleaning: எல்இடி ஸ்மார்ட் டிவியை இப்படி சுத்தம் பண்ணுங்க.. இல்லனா நஷ்டம் உங்களுக்குதான்!
எல்இடி டிவி (Image Credit source: Freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 28 Aug 2024 15:56 PM

எல்இடி டிவி சுத்தம் செய்யும் முறை: வீட்டில் தூசி நிறைந்த பேன், சமையலறை, அலமாரிகள், ஸ்பீக்கர்கள் போன்றவற்றை நாம் அடிக்கடி சுத்தம் செய்கிறோம். ஆனால், எல்இடி திரைகளை சுத்தம் செய்வதை மட்டும் மறந்து விடுகிறோம். எல்இடி திரைகளை சுத்தம் செய்வது முக்கியம். தற்போது பெரும்பாலான வீடுகளில் எல்இடி ஸ்மார்ட் டிவி பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய காலத்தில் எல்இடியில் இருக்கும் சிறப்பான அம்சங்களுக்காகவே பலர் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது சாதாரண டிவியை விட சிறந்தது. சாதாரண டிவியாக இருந்தாலும் சரி, ஸ்மார்ட் டிவியாக இருந்தாலும் சரி, திரையில் தூசி மற்றும் கைரேகைகள் படிவது சகஜம். வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்வது போல் டிவி திரையை சுத்தம் செய்தால், உங்கள் எல்இடி டிவி பழுதடையலாம். உங்கள் வீட்டிலும் எல்இடி டிவி இருந்தால், அதை சுத்தம் செய்வதற்கு முன் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் புதிய எல்இடி டிவியை மீண்டும் வாங்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். அந்த வகையில், எல்இடி ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்ய, நீங்கள் செய்ய வேண்டிய டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Kitchen Tips: சமையலறை கத்தியில் துருவா..? கவலை வேண்டாம்! இப்படி க்ளீன் பண்ணுங்க!

  • உங்கள் டிவி திரையை நேரடியாக ஈர துணியை கொண்டு துடைப்பதை தவிருங்கள். இது மின் அதிர்வை ஏற்படுத்தலாம். முதலில் எல்இடி ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வதற்கு முன், டிவியை அணைத்துவிட்டு, பிளெக் பாயிண்டில் இருந்து வயரை கலட்டுங்கள். இது திரையை சுத்தம் செய்யும்போது மின் அதிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
  • இதற்கு பிறகு, சுத்தமான உலர்ந்த துணையை பயன்படுத்தி, உங்கள் எல்இடி ஸ்மார்ட் டிவியில் இருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை மெதுவாக க்ளீன் செய்யுங்கள். சுத்தம் செய்யும்போது பருத்தி அல்லது பாலியஸ்டர் துணி, செய்தித்தாள் போன்றவற்றை பயன்படுத்தும்போது திரையில் கீறல்கள் விழலாம். எனவே, எல்இடி, எல்சிடி டிவியை துடைக்கும்போது மைக்ரோஃபைபர் ( குடல் துண்டு) பயன்படுத்துவது நல்லது.
  • திரையில் கறை அல்லது புள்ளிகள் இருந்தால், அதை நகங்களால் சுத்தம் செய்ய வேண்டாம். இது திரையில் கீறல்களை ஏற்படுத்தக்கூடும்.
  • ஒருவேளை கறைகள் இருந்தால் சோப்பு அல்லது சோப்பு சார்ந்த திரவம், சானிடைசர் கூட பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் திரைக்குள் ஊடுறுவி பிரச்சனையை உண்டாக்கும். நீங்கள் இப்படி செய்வதன்மூலம், திரை சேதமடைந்து, திரையில் கருப்பு புள்ளிகள் தோன்றக்கூடும். எனவே, டிவி திரையை சுத்தம் செய்யும் போது ஸ்கிரீன் கிளீனரைப் பயன்படுத்துவது நல்லது.
  • எல்இடி டிவியை அடிக்கடி சுத்தம் செய்வது முக்கியம். இது தூசி, அழுக்கு மற்றும் கறை ஆகியவற்றிலிருந்து திரையைப் பாதுகாக்க உதவும். இது உங்கள் டிவியின் ஆயுளையும் அதிகரிக்கும்.
  • ஒருமுறை துணியை துடைத்தபின், மீண்டும் மற்றொரு துணியை பயன்படுத்துவது நல்லது. அதே துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் திரையில் கீறல்கள் விழலாம். புதிய துணிகளை பயன்படுத்துவதன் மூலம் அதில் விழும் கீறல்களை தடுக்கலாம்.

ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!

இவ்வாறு செய்வதன்மூலம், நீங்கள் வாங்கிய எல்இடி டிவிகளை நீண்ட காலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். அதில் சேரும் அழுக்குகளையும் உடனடியாக நீக்கி, புதியது போல் பளபளப்ப செய்யலாம்.

Latest News