Gold Cleaning Tips: பழைய தங்க நகைகள் புதியது போல் ஜொலிக்க வேண்டுமா..? எளிய முறையில் வீட்டில் இப்படி க்ளீன் பண்ணுங்க..!
Gold Jewellery: திருமணம் முதல் குடும்ப குலதெய்வம் வழிபாடு வரை தங்க நகைகள் நம் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் மற்றும் காதணிகள் அணிவதற்கு மிகவும் அழகாக இருக்கும். பலர் தினமும் தங்கம் அணிவதால் அதன் பொலிவு குறைய தொடங்குகிறது. தங்கம் வெள்ளியை போல் கருப்பது இல்லையென்றாலும், தங்கம் தொடர்ந்து பயன்படுத்தினால் அழுக்காகி அதன் பொலிவை இழக்க தொடங்குகிறது.
தங்கம் விலைமதிப்பற்ற உலோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பெண்கள் மத்தியில் தங்கத்தின் மீதான மோசம் அதிகம் என்றே கூறலாம். திருமணம் முதல் குடும்ப குலதெய்வம் வரை தங்க நகைகள் நம் இதயத்தில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் மற்றும் காதணிகள் அணிவதற்கு மிகவும் அழகாக இருக்கும். பலர் தினமும் தங்கம் அணிவதால் அதன் பொலிவு குறைய தொடங்குகிறது. தங்கம் வெள்ளியை போல் கருப்பது இல்லையென்றாலும், தங்கம் தொடர்ந்து பயன்படுத்தினால் அழுக்காகி அதன் பொலிவை இழக்க தொடங்குகிறது.
அந்தவகையில் தங்க நகைகள் மீண்டும் அதே பளபளப்பை மீண்டும் பெற வீட்டிலேயே தங்க நகைகளை எப்படி சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Breast Cancer: மார்பக புற்றுநோய் பற்றிய பயமா..? வீட்டிலேயே இப்படி பரிசோதனை செய்து பாருங்க!
தங்க நகைகள் அதன் பளபளப்பை இழக்க காரணம் என்ன..?
உடல் வியர்வை மற்றும் அழுக்குகளுடன் தங்கம் வினைபுரியும் போது தங்க நகைகள் அதன் பளபளப்பை இழக்க தொடங்குகின்றன. அதேபோல், வாசனை திரவியம், மாய்ஸ்சரைசர் மற்றும் அழகுசாதன பொருட்களும் நகைகளின் அழகை கெடுக்கலாம்.
எப்படி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரலாம்..?
சமையல் சோடா என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடாவை சமையல் மட்டுமின்றி தங்க நகைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இதற்கு 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். இப்போது, அந்த பேஸ்ட்டில் தங்க நகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, பஞ்சு உதவியுடன் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்தால் பளபளக்க தொடங்கும்.
மஞ்சள் மற்றும் வாஷிங் பவுடர்:
தங்க நகைகளை சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிது வாஷிங் பவுடர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் நகைகளை போடுங்கள். பின்னர் அதை வெளியே எடுத்து ஒரு டூத் பிரஷ் கொண்டு மெதுவாக சுத்தம் செய்தால் தங்க நகைகள் பழைய நிலையை பெறும்.
எலுமிச்சை:
எலுமிச்சையில் இயற்கையாகவே சுத்தம் செய்யும் தன்மை இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். தங்க நகைகளை சுத்தம் செய்யவும் எலுமிச்சைகளை பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்க்கவும். இதில் தங்க நகைகளை 30 நிமிடங்கள் அதில் போட்டி வைக்கவும். பின் ஒரு ஸ்கர்ப் கொண்டு தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் தங்க நகைகள் சுத்தமாகும்.
பல் துலக்கும் பேஸ்ட்:
பழைய பல் துலக்கும் பிரஷ்-ஷில் சிறிதளவு பல் துலக்கும் பேஸ்டை தடவி நகைகள் மீது மெதுவாக தேய்த்தால் அழுக்கு மற்றும் கறைகள் நீங்கும். பிரஷ் கிடைக்கவில்லை என்றால் மென்மையான துணி கொண்டு பேஸ்ட் தடவி சுத்தம் செய்யலாம்.
ALSO READ: Monsoon Health Tips: மழைக்காலத்தில் படையெடுக்கும் நோய்கள்.. உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி..?
சோப்பு தண்ணீர்:
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் மற்றும் சில துளிகள் ஷாம்பு அல்லது சோப்பை கலந்து, அதில் நகைகளை நனைத்து, பிரஷ் மூலம் மெதுவாக சுத்தம் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும், பின்னர் மென்மையான துணியால் உலர வைக்கவும்.
தங்க நகைகளை சுத்தம் செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள்:
தங்க நகைகளை சுத்தம் செய்யும்போது, சோப்பில் கடுமையான ரசாயன கலவைகளை இல்லை என்பதை பரிசோதித்த பின் பயன்படுத்துங்கள். அதாவது ப்ளீச் போன்ற கடுமையானவற்றை பயன்படுத்தும்போது தங்க நகைகளை அதன் நிறத்தை முழுமையாக இழக்கலாம். நகைகளை நேரடியாக சோப்பில் ஊறவைக்கும் முன், தங்கத்தின் ஒரு பகுதியில் சோதனை செய்து பாருங்கள். இதனால் நகைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன்பின், சோப்பு கலவையில் தங்க நகைகளை போட்டு சுத்தம் செய்யுங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)