5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mushrooms : நீரிழிவு நோயாளிகள் காளான் சாப்பிடலாமா? எப்படி சமைக்கணும் தெரியுமா?

Diabetes prevention: காளான் மிகவும் விலையுயர்ந்த உணவுப் பொருள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளும் இதை சாப்பிடலாமா? வேண்டாமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் உண்மையில் பயனளிக்கின்றன.சர்க்கரை நோயாளிகள் ஏன் காளானை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

Mushrooms : நீரிழிவு நோயாளிகள் காளான் சாப்பிடலாமா? எப்படி சமைக்கணும் தெரியுமா?
காளான்
Follow Us
c-murugadoss
CMDoss | Updated On: 10 Jun 2024 13:05 PM

சர்க்கரை நோய் : நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உடல்நலப் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும், சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகள் குறித்த சில கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. காளான்கள் அந்த உணவுகளில் ஒன்றுதான் காளான்களை பூஞ்சை என வகைப்படுத்தி பலர் தவிர்க்கின்றனர். காளான் மிகவும் விலையுயர்ந்த உணவுப் பொருள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளும் இதை சாப்பிடலாமா? வேண்டாமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் உண்மையில் பயனளிக்கின்றன.சர்க்கரை நோயாளிகள் ஏன் காளானை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு காளான்கள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

 

  1. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது: காளான் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ், கிளைசெமிக் சுமை கொண்ட ஒரு சூப்பர்ஃபுட்.. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது.. அதாவது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்.
  2. கார்போஹைட்ரேட் கம்மி: காளான்களில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. குறைந்த கார்ப் உணவுகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதைத் தடுக்க வேண்டிய அவசியமில்லை.
  3. நீரிழிவு நோய்க்கு எதிரான பாதுகாப்பு: காளான்களில் பாலிசாக்கரைடுகள் உள்ளன. இவை நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளன. இது நீரிழிவு நோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  4. எடை இழப்பு – இதய ஆரோக்கியம்: காளான்களை தொடர்ந்து சாப்பிடுபவர்கள் தங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும். நீரிழிவு நோய்க்கான முதல் படியாக உடல் பருமன் கருதப்படுகிறது. இது தவிர, அதிக எடையுடன் இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. காளான்கள் கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Also Read : இஞ்சி தண்ணீர் ஒரு கப் போதும்.. மாதவிடாய் வலி முதல் மலச்சிக்கல் வரை தீர்வு

காளான்களை எப்படி சமைக்க வேண்டும்?

காளான்களில் புரதங்கள், உணவு நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, டெர்பென்ஸ், குயினோலோன்கள், ஸ்டீராய்டுகள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீட்டா-குளுக்கன் போன்ற பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன. இவ்வளவு நன்மைகள் கொண்ட காளான்களை சரியாக சமைத்தால்தான் சரியான பலன் கிடைக்கும். காளானை கறியாகவோ அல்லது சாலட்டாகவோ சாப்பிடலாம்.. இது தவிர, குறைந்த தீயில், குறைந்த எண்ணெயில் மெதுவாக வேகவைக்க வேண்டும். அப்போது தான் அதன் பலன்கள் உடலுக்கு ஏராளமாக இருக்கும்.

Latest News