5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உடலுறவுக்கு பிறகு செய்யக்கூடாத சில விஷயங்கள்.. இந்த சிக்கல்கள் உண்டாகலாம்!

Physical Intimacy: நம்மில் பெரும்பாலான தம்பதிகள் உடலுறவுக்குப் பிறகு எடுக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக உடலுறவு முடிந்த உடனேயே செய்யும் சில தவறுகள் பெண்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்புபவர்கள் சில டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. இந்தநிலையில், உடலுறவுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Health Tips: உடலுறவுக்கு பிறகு செய்யக்கூடாத சில விஷயங்கள்.. இந்த சிக்கல்கள் உண்டாகலாம்!
கோப்பு புகைப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Aug 2024 13:34 PM

உடலுறவு: காதலும், காமமும் தம்பதிக்குள் விவரிக்கை முடியாத உணர்வுகள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஆற்ற இதற்கு அதிகம். மனதளவில் காதல் இருவரையும் இணைக்கிறது என்றால், உடலளவில் ரொமான்ஸ் இணைக்கிறது. இப்படியான புனிதமான உடலுறவின்போதும், உடலுறவில் ஈடுபட்ட பிறகும் தம்பதி சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி இல்லாவிட்டால், வாழ்நாள் முழுவதும் இருவரும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில விஷயங்கள் உடலுறவுக்கு பிறகு செய்யக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நம்மில் பெரும்பாலான தம்பதிகள் உடலுறவுக்குப் பிறகு எடுக்க வேண்டிய சில வழிமுறைகளைப் பற்றி அறிந்திருப்பதில்லை. இதன் காரணமாக உடலுறவு முடிந்த உடனேயே செய்யும் சில தவறுகள் பெண்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் விரைவில் கர்ப்பம் தரிக்க விரும்புபவர்கள் சில டிப்ஸ்களை பின்பற்றுவது நல்லது. இந்தநிலையில், உடலுறவுக்கு பிறகு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Sexual Health: உடலுறவில் உங்கள் பெண் துணை முழு திருப்தி அடைந்தாரா..? தெரிந்துகொள்ள இதை ட்ரை பண்ணுங்க!

சிறுநீர் கழித்தல்:

உடலுறவுக்கு பிறகு உடனடியாக சிறுநீர் கழிக்க கூடாது. தொற்று பயம் இருந்தால் காட்டன் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. குறைந்தது ஒரு 15 முதல் 20 நிமிடத்திற்கு பிறகு சிறுநீர் கழிக்கலாம். அதேபோல், பல பெண்கள் உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கிறார்கள். இவ்வாறு செய்வதாலும் தொற்று நோய் அபாயம் ஏற்படும்.

சோப்பு பயன்படுத்துதல்:

உடலுறவுக்குப் பிறகு பிறப்புறுப்பை சோப்பினால் கழுவக் கூடாது. பெண்கள் இவ்வாறு செய்வதால் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம், வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சோப்பு மற்றும் கை கழுவுவதற்கு பதிலாக, தண்ணீர் மட்டும் பயன்படுத்தி கழுவுவது நல்லது. மேலும், சிலர் உடலுறவு முடிந்த உடனேயே கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்வார்கள். ஆனால் இது நல்லதல்ல. முடிந்தால் உடலுறவுக்குப் பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்யலாம்.

குளித்தல்:

உடலுறவுக்கு பிறகு உடனடியாக குளிப்பதும் நல்லதல்ல. சிலர் உடலுறவுக்கு பிறகு சுடுதண்ணீர் பயன்படுத்துகிறார்கள். இதுவும் தவறு. ஏனெனில் பொதுவாக உடலுறவுக்குப் பிறகு யோனி தசைகள் தளர்ந்து திறக்கும். அதனால்தான் சூடான குளியல் தொற்றுநோயை ஏற்படுத்தும்.

இறுக்கமான உடை:

உடலுறவுக்கு பிறகு சிலர் இறுக்கமான ஆடைகளை உடுத்துகிறார்கள். இந்த மாதிரியான நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணியவே கூடாது. துணியால் செய்யப்பட்ட உள்ளாடைகளை அணிவதால் தொற்று, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலுறவுக்குப் பிறகு இறுக்கமான உள்ளாடைகளைத் தவிர்த்துவிட்டு லேசான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

கை கழுவுதல்:

உடலுறவின் போது ஆண்களும் பெண்களும் தங்கள் பிறப்புறுப்பைத் தொடுவது இயற்கையானது. இருப்பினும், உடலுறவுக்குப் பிறகு கைகளைக் கழுவ வேண்டும். இல்லையெனில் பல பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடனடியாக தூங்கக் கூடாது:

உடலுறவுக்கு பிறகு 30 நிமிடங்கள் ரிலாக்ஸாக இருப்பது நல்லது. உடலுறவின்போது இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதையடுத்து, நீங்கள் ரிலாக்ஸ் ஆனபின், இதனால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராகும்.

ALSO READ: Health Tips: நீங்கள் எப்போதும் சோர்வாக உணருகிறீர்களா..? இது புத்துணர்ச்சியை தரும்!

தண்ணீர்:

உடலுறவுக்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

ஈரமான துடைப்பான்களை பயன்படுத்தக்கூடாது:

எக்காரணம் கொண்டும் உடலுறவுக்குப் பிறகு ஈரமான துடைப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது. இதில் உள்ள இரசாயனங்கள் சருமங்களில் படர்ந்து பக்கவிளைவை ஏற்படுத்தும்.

Latest News