5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய எளிய வழிகள்.. இவை இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

Physical Intimacy: இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் உச்சக்கட்டத்தை முழுவதும் அனுபவிக்க முடியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ஆண்களை மட்டும் குறை கூறுவது சரியாக இருக்காது. பலருக்கு செக்ஸ் பற்றிய சரியான அறிவு இல்லாததே காரணம். உடலுறவில் உச்சக்கட்டம் என்பது ஆர்கசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உச்சக்கட்டத்தை தொட வேண்டும் என்பதற்காகவே பலர் வயாகரா போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இப்படியெல்லாம் செய்ய நினைக்காதீர்கள்.

Health Tips: உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய எளிய வழிகள்.. இவை இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!
உச்சக்கட்டம் (Image: Freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 28 Aug 2024 21:00 PM

உச்சக்கட்டம்: உடலுறவின்போது உச்சக்கட்டத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்று பெரும்பாலான ஆண்களுக்கு தெரிவது கிடையாது. இதனால், தங்கள் மனைவிமார்களை ஆண்களால் முழு திருப்தியை கொடுக்க முடியவில்லை. இதற்காக, மருத்துவர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்திய பெண்களில் 70 சதவீதம் பேர் உச்சக்கட்டத்தை முழுவதும் அனுபவிக்க முடியவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ஆண்களை மட்டும் குறை கூறுவது சரியாக இருக்காது. பலருக்கு செக்ஸ் பற்றிய சரியான அறிவு இல்லாததே காரணம். உடலுறவில் உச்சக்கட்டம் என்பது ஆர்கசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த உச்சக்கட்டத்தை தொட வேண்டும் என்பதற்காகவே பலர் வயாகரா போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இப்படியெல்லாம் செய்ய நினைக்காதீர்கள். முதலில் உங்கள் பிரச்சனையை புரிந்து கொண்டு, அதற்கான தீர்வு என்ன என்பதை யோசித்து செயல்படுத்துங்கள்.

ALSO READ: Health Tips: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய இதுதான் காரணமா..? தெரிஞ்சும் இந்த தப்பு செய்யாதீங்க!

உடலுறவின் நேரம் என்ன..?

ஆண்களாகிய நீங்கள் உடலுறவின்போது விந்துவை அதிவேகமாக வெளியேற்றினால், உங்கள் மனைவிக்கு உங்களால் உச்சக்கட்டத்தை கொடுக்க முடியாது. ஆண்கள் குறைந்தது 3 – 4 நிமிடங்களில் விந்துவை வெளியேற்றினால், அவர்கள் மருத்துவர்களை ஆலோசிப்பது நல்லது. அதேசமயம் உடலுறவு நேரம் குறைந்தது 8-10 நிமிடங்கள் இருந்தால், உங்களது மனைவியை உங்களால் முழுவதுமாக திருப்தியை தர முடியும்.

ஆண்குறி முழு விரைப்பை பெறவில்லையா..?

ஆணின் ஆணுறுப்பு முழு விரைப்பை பெறவில்லை என்றால், உடலுறவை முழுமையாக அனுபவிக்க முடியாது. எனவே, உடலுறவின்போது உங்களது ஆணுறுப்பு முழு விரைப்பை பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்கவும். பலர் இதை தொடர்ந்து கவனிக்காமல் விடுவதால் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.

உங்கள் துணைக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்:

இந்தியாவில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் விருப்பம் வந்ததுடன் தங்களது துணையை நோக்கி செல்கின்றனர். தங்களது துணைக்கு பாலியல் ஆசை இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லை. பாலியல் ஆசை இல்லாததால் பெண்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் இருப்பதில்லை. அதில் கவனம் செலுத்தினால்தான் அவர்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தை கொடுக்க முடியும்.

முன்விளையாட்டு:

ஃபோர்ப்ளே என்பது உடலுறவுக்கு முன் செய்யப்படும் முக்கிய விளையாட்டாகும். முத்தம் தொடுதல், பெண்களின் முக்கிய உறுப்புகளை அழுத்துதல் போன்றவை முன் விளையாட்டின் ஒரு பகுதியாகும். பல ஆண்கள் முன்விளையாட்டுக்கு நேரம் கொடுப்பதில்லை. இதன் காரணமாக, பெண்களால் முழுமையான உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியவில்லை. எனவே, ஆண்கள் முன்விளையாட்டுக்கு போதுமான நேரத்தை ஒதுக்குவது நல்லது.

விரல்களை பயன்படுத்துங்கள்:

உடலுறவில் விரல்களும் மந்திரக்கோல் போல் செயல்படும். அவற்றை சரியாக பயன்படுத்தினாலே போதும் பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவார்கள். முதலில், உங்கள் கைகள் சுத்தமாகவும், நகங்கள் நீளமாக இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் விரல் கொண்டு பெண்களின் முக்கிய உறுப்புகளை தடவுவதன் மூலமும் பெண்கள் உச்சக்கட்டத்தை பெறலாம்.

ALSO READ: Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

ஹார்ட்கோர் வேண்டாம்:

பல ஆண்கள் ஆபாசப் படங்களை பார்த்த பிறகு ஹார்ட்கோர் செய்ய முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக, ஆரம்பத்திலேயே விந்து விரைவாக வெளியேற வாய்ப்பு உண்டு. இது உங்கள் மனைவிக்கு வலியையும் கொடுக்கலாம். எனவே, முதல் 3-4 நிமிடங்கள் மெதுவாக இயங்கியபின், அதன்பின் வேகத்தை அதிகரிக்கலாம்.

Latest News