5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: சுய இன்பம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்குமா? இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

Masturbation: அதிகப்படியான சுய இன்பம் செய்தால் உடல் வளர்ச்சி குறையும், எடை குறையும், உடலுறவில் நாட்டம் இருக்காது போன்ற பல கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். சுய இன்பம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கலாம். இதில், தலையிடுவதில் யாருக்கும் உரிமை இல்லை.

Health Tips: சுய இன்பம் செய்தால் ஆரோக்கியம் பாதிக்குமா? இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!
சுய இன்பம் (image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 26 Aug 2024 09:59 AM

சுய இன்பம் பற்றிய கட்டுக்கதை: சுய இன்பம் பற்றி பேசுவது நம் சமூகத்தில் தடை செய்யப்பட்டதாக கருதப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. அதிகப்படியான சுய இன்பம் செய்தால் உடல் வளர்ச்சி குறையும், எடை குறையும், உடலுறவில் நாட்டம் இருக்காது போன்ற பல கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். சுய இன்பம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அது ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கலாம். இதில், தலையிடுவதில் யாருக்கும் உரிமை இல்லை.

ALSO READ: Sexual Health: உடலுறவில் உங்கள் பெண் துணை முழு திருப்தி அடைந்தாரா..? தெரிந்துகொள்ள இதை ட்ரை பண்ணுங்க!

சுய இன்பம் என்றால் என்ன..?

சுய இன்பம் என்ற சொல் முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வார்த்தை அப்போதிலுருந்து தார்மீக ரீதியாக தவறாக கருதப்படுகிறது. சுய இன்பம் (ஹஸ்மைதுன்) என்பது ஒருவரின் அந்தரங்க உறுப்புகளை தூண்டுவதன் மூலம் பாலியல் திருதி அடையும் ஒரு செயலாகும். ஆண்ணோ, பெண்ணோ இந்த செயலை செய்யும்போது தங்களது பிறப்புறுப்புகளை தூண்டி உச்சத்தை அடைய முயற்சி செய்கின்றனர்.

சுய இன்பம் தொடர்பான சில பொதுவான கட்டுக்கதைகள் பின்வருமாறு:

விந்தணு தீர்ந்து போகுதல்:

சுய இன்பம் செய்வதால் ஒரு ஆணின் விந்தணு தீர்ந்து போய்விடும் என்ற கட்டுக்கதை நீண்ட ஆண்டுகளாக நிலவி வருகிறது. இது முற்றிலும் உண்மையில்லை. விந்து உற்பத்தி என்பது ஆண்களின் 14 முதல் 15 வயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு செயல்முறையாகும். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் விந்து உற்பத்தியாகும். அதற்காக 24 மணிநேரமும் சுய இன்பம் செய்யக்கூடாது. நம் உடலில் எப்படி உமிழ்நீர் சுரக்கிறதோ அதேபோல் விந்தணுவும் சுரக்கும். இது நம் உடலின் ஆற்றலின் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

உடல் ஒல்லியாகும்:

சுய இன்பம் செய்வதால் உடல் ஒல்லியாகும் என்ற கட்டுக்கதையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. உடல் எடைக்கும், சுய இன்பத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. பதின்வயதினர் ஒருநாளில் அதிகமுறை சுய இன்பம் கொள்கின்றனர். இது அவர்களுக்கு சோர்வை மட்டுமே கொடுக்குமே தவிர, உடல் எடையை குறைக்காது.

பிறப்புறுப்பை சுருக்குமா..?

சுய இன்பம் தொடர்பான பெரிய கட்டுக்கதை இதுதான். நீங்கள் சுய இன்பம் செய்தால் உங்கள் பிறப்புறுப்பு சுருக்கம் அடையும் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுவும் உண்மையில்லை. ஆண்கள் சுய இன்பம் செய்தபிறகு, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கும் திரும்பும். இருப்பினும், அதிகமாக சுய இன்பம் அதிகமாக செய்வதால் உங்கள் எரிச்சல் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.

உடலுறவின் நாட்டம் இருக்காது:

அதிகளவில் சுய இன்பம் செய்வதால், உங்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது என்ற கட்டுக்கதையும் பரவுகிறது. உடலுறவு மற்றும் சுய இன்பம் என இந்த இரண்டும் வேறுபட்டவை. இந்த இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைப்பது தவறு. சுய இன்பம் என்பது ஒரு எளிய முறை மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். உடலுறவு என்பது இருவருக்கும் நீண்ட நேரம் மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். உடலுறவின் போது ஆண்களும், பெண்களும் வித்தியாசமான மகிழ்ச்சியை தரும்.

ALSO READ: Health Tips: உடலுறவுக்கு பிறகு செய்யக்கூடாத சில விஷயங்கள்.. இந்த சிக்கல்கள் உண்டாகலாம்!

மனநிலை பிரச்சனையை ஏற்படுத்தும்:

சுய இன்பம் செய்வதால் மன நிலை பிரச்சனையை அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். அதுவும் உண்மை இல்லை. சுய இன்பத்தின் காரணமாக டோபமைன் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. மேலும், சுய இன்பத்தின் காரணமாக வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் எண்டோர்பின் என்ற ஹார்மோனும் வெளியாகிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் காரணமாகவே, சுய இன்பத்திற்கு பிறகு மக்கள் நிம்மதியான இருப்பதற்கான காரணம் இதுதான். மேலும், இது நல்ல தூக்கத்தை பெறவும், பிபியை குறைக்கவும் உதவுகிறது.

குறிப்பு:

சுய இன்பம் செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், அதிக படியான சுய இன்பமும் ஆபத்தானதுதான். டீன் ஏஜ் பசங்கள் தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிந்து தினந்தோறும் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். அது நாள்தோறும் பழக்கத்தை ஏற்படுத்தி, ஒரு நாளைக்கு 4 முறைக்கு மேல் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர். மது, புகைப்பிடித்தல் போன்று சுய இன்பத்திற்கு சில அடிமையாகி விடுகின்றனர். இதன் காரணமாக, இவர்களுக்கு மற்றவைகளின் மீது ஈர்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. அதிகமாக சுய இன்பம் செய்வதாக தோன்றினாலோ, உங்களுக்கு இதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் தோன்றினாலோ நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Latest News