Flax Seed Benefits: புற்றுநோயை தடுக்கும் ஆளிவிதை.. தினமும் எடுத்தால் பல நன்மைகள் உண்டு!
Health Tips: தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளின் அடையாளங்களை மறைக்க உதவி செய்கிறது. ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றை உட்கொள்வதன் மூலம் சில வகையான புற்றுநோய்களை குறைக்கலாம்.
ஆளி விதை நன்மைகள்: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆளிவிதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதையில் ஒமேகா 3 அதிகம் உள்ளது. இதன் காரணமாக, இது மூட்டுவலி, நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் ஆளி விதைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கும். மேலும், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளின் அடையாளங்களை மறைக்க உதவி செய்கிறது. ஆளி விதையில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவற்றை உட்கொள்வதன் மூலம் சில வகையான புற்றுநோய்களை குறைக்கலாம். இந்தநிலையில், ஆளி விதை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Health Tips: மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளான்.. அருமருந்தாக செயல்படும் அற்புத உணவு!
இரத்த அழுத்தம் குறையும்:
ஆளிவிதை மற்றும் ஆளிவிதை பொடியை உட்கொள்வதால் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். (சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (SBP) என்பது இதயம் சுருங்கும்போது, இரத்தத்தை தமனிகளுக்குள் தள்ளும் சக்தியாகும். டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் (DBP) என்பது துடிப்புகளுக்கு இடையில் இதயம் ஓய்வெடுக்கும் போது ஏற்படுவதாகும்.) எனவே, பிபி உள்ளவர்கள் தொடர்ந்து ஆளிவிதை எடுத்துக்கொள்வதன் மூலம் பிபி அளவை குறைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதன் காரணமாக பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால்:
ஆளி விதைகளை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, புற தமனி நோய் உள்ளவர்கள் ஆளி விதைகளை உட்கொண்ட பிறகு கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் ஆளிவிதை உட்கொள்வது உடல் நிறை குறியீட்டெண், மொத்த கொலஸ்ட்ராலை குறைப்பதாக மற்றொரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எடை இழப்பு:
எடையை குறைக்க விரும்புவோர், எடையை சரியாக பராமரிக்க விரும்புவோருக்கு ஆளிவிதை ஒரு வரம் என்றே கூறலாம். ஆளிவிதையில் உள்ள நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, மெதுவாக ஜீரணமாக்க உதவுகிறது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதால், அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தும்.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:
ஆளிவிதைகளில் லிக்னான்கள் அதிகமாக உள்ளது. இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. சில ஆய்வுகளின்படி, ஆளி விதைகள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்றும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஆரோக்கியத்தை தரும். மேலும், ஆளிவிதை பெருங்குடல், தோல், இரத்தம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்களைத் தடுக்கின்றன.
ALSO READ: Health Tips: இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கா..? இது பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்!
சரும பாதுகாப்பு:
சருமம் உள்ளிருந்து சுத்தமாக இருந்தால்தான் முகத்தில் இயற்கையான பொலிவு ஏற்படும். இதற்கு ஒரு முட்டையை உடைத்து, அதில் ஆளி விதை தூளை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும். அதன்பின், மாஸ்க் காய்ந்த பிறகு, தண்ணீரில் கழுவி, சிறிது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.