5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் அமிர்தசாரி.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க..!

Healthy Food: பெரும்பாலானோர் ஹோட்டல்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை தேடி சாப்பிடுகின்றன. தினம் தினம் எதையாவது புதிதாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா, ஹோட்டலுக்கு சென்றால் அங்கு நாம் வாங்கும் உணவு ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் எழுகிறதா..? இத்தகைய சூழ்நிலையில் ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவை வீட்டிலேயே ஆரோக்கியமான உணவாக சமைத்து சாப்பிடலாம். இன்று நாம் பன்னீர் அமிர்தசாரி எளிதான முறையில் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Food Recipes: ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் அமிர்தசாரி.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க..!
பன்னீர் அமிர்தசாரி (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 16 Sep 2024 17:28 PM

தினந்தோறும் வீட்டில் செய்யும் சாம்பார், புளிக்குழம்பு போன்ற உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு நமக்கு சலிப்பை தந்திருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலானோர் ஹோட்டல்களுக்கு சென்று வித்தியாசமான உணவுகளை தேடி சாப்பிடுகின்றன. தினம் தினம் எதையாவது புதிதாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதா, ஹோட்டலுக்கு சென்றால் அங்கு நாம் வாங்கும் உணவு ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் எழுகிறதா..? இத்தகைய சூழ்நிலையில் ஹோட்டலில் தயாரிக்கப்படும் உணவை வீட்டிலேயே ஆரோக்கியமான உணவாக சமைத்து சாப்பிடலாம். இன்று நாம் பன்னீர் அமிர்தசாரி எளிதான முறையில் எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

பன்னீர் அமிர்தசாரி:

பன்னீர் அமிர்தசாரி என்பது பன்னீர் மூலம் செய்யப்படும் ஒரு சுவையான உணவாகும். இது சப்பாத்தி, தோசை மற்றும் புரோட்டா போன்ற உணவுகளுடன் இணைத்து சாப்பிடலாம். இதை வாரத்திற்கு ஒருமுறை வீட்டில் செய்வதன்மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பன்னீர் அமிர்தசாரி செய்ய தேவையான பொருட்கள்:

4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 250 பன்னீர் போதுமானது. முதலில் 250 கிராம் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். அதன்பின் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாகவும், இரண்டு தக்காளி தேவைகேற்ப அளவில் வெட்டி கொள்ளுங்கள். தொடர்ந்து, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், முந்திரி, திராட்சை, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள், மூன்று ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய், பச்சை கொத்தமல்லி, தேவையான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை:

சுவையான பன்னீர் அமிர்தசாரி செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாய் சூடானதும் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, பொடி பொடியாக வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் அதில் தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை சென்றதும் தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போன்றவற்றை சேர்த்து மசாலாவை நன்றாக கலக்கி கொள்ளுங்கள். தொடர்ந்து முந்திரி, திராட்சை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி மசாலா தூளுடன் நன்றாக கலந்தபின்பு, உங்களுக்கு தேவை என்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளுங்கள்.

கிரேவியாக தயாரானவுடன் பன்னீர் துண்டுகள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து உங்கள் ருசிக்கேற்ப நன்கு கலந்து மூடி வைக்கவும். மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, பன்னீர் நன்றாக கிரேவியுடன் கலந்து மென்மையாக வந்ததும், அதில் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். கிரேவி நன்றாக வந்ததும் அதன் மேல் தாராளமாக கொத்தமல்லி தழை தூவி கீழே எடுத்து வையுங்கள்.

தயார் செய்த பன்னீர் அமிர்தசாரியை சூடான ரொட்டி, பரோட்டா அல்லது நானுடன் சேர்ந்து சாப்பிடலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஹோட்டலில் வாங்கி சாப்பிட்ட உணர்வை கொடிக்கும். இது மட்டுமின்றி உங்கள் வீட்டிற்கு சில விருந்தினர்கள் வந்திருந்தால், இந்த பன்னீர் அமிர்தசாரி தயார் செய்து கொடுத்து அசத்தலாம்.

ALSO READ: Good Cholesterol Foods: நல்ல கொழுப்பு உடலுக்கு ஆரோக்கியம்.. HDL அளவை அதிகரிக்கும் உணவுகள்..!

பன்னீரின் நன்மைகள்:

பன்னீர் முழுமையான புரதத்தின் மூலமாகும். இது அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது.

தினமும் உங்கள் உணவில் பன்னீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளை வழங்குகின்றன. தினமும் 100 கிராம் பன்னீர் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து விலகி இருப்பீர்கள். பன்னீரில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். பன்னீர் தினமும் எடுத்து கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும்.

நீரிழிவு நோயாளிகள் தாராளமாக பன்னீரை எடுத்துக்கொள்ளலாம். பன்னீரில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) குறைவாக உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுத்தும் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. பன்னீரில் அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது.

Latest News