5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த குறைபாடே அதற்கு காரணம்..!

Headache: வெறுமனே ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டால், நேரடியாக மெடிக்கல் கடைக்கு சென்று மருந்து வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்தவகையில், தலைவலியை குணப்படுத்த முயற்சிக்கும் போது, ​​நாம் அனைவரும் முதலில் அதன் காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், உடலில் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இல்லாதது தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தலைவலியை ஓரளவு தடுக்க முடியும்.

Health Tips: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த குறைபாடே அதற்கு காரணம்..!
தலைவலி (Photo Credit: BSIP/Universal Images Group via Getty Images)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 31 Aug 2024 11:50 AM

தலைவலி: தலைவலி இன்று பலரை பாதித்து பெரிய அளவிலான தொல்லைகளை தருகிறது. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் தலைவலியால் அவதிப்படுகின்றனர். ஒரு சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும், மற்றவர்களுக்கு அவ்வப்போது தலைவலி பிரச்சனையை உண்டாக்கும். வெறுமனே ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டால், நேரடியாக மெடிக்கல் கடைக்கு சென்று மருந்து வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்தவகையில், தலைவலியை குணப்படுத்த முயற்சிக்கும் போது, ​​நாம் அனைவரும் முதலில் அதன் காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், உடலில் சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இல்லாதது தலைவலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் தலைவலியை ஓரளவு தடுக்க முடியும். அந்தவகையில், தலைவலி ஏன் உண்டாகிறது. அவற்றை வராமல் தடுக்க வைட்டமின்கள் மற்றும் வைத்தியங்கள் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சுரைக்காய்.. தினசரி உணவில் மறக்காம சேருங்க!

உடல் நீரிழப்பு:

உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாதது கூட தலைவலியை ஏற்படுத்தலாம். தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது மிக மிக முக்கியம். நீரிழப்பு உங்கள் அன்றாட செயலை பாதித்து, அசௌகரியத்தை அதிகரிக்கும். இது பின்னர் தலைவலியை உண்டாக்கி, மோசமாக்குகிறது. உங்களுக்கு எப்போதாவது தலைவலி வந்தால், முன்னெச்சரிக்கையாக உங்கள் உடல் எப்போதும் நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரி, தர்ப்பூசணி போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

வைட்டமின் டி குறைபாடு:

வைட்டமின் டி உடலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். உடலில் வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தாலும், அதுவும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த வைட்டமின் குறைபாடுதான் உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனையை உண்டாக்குகிறது. . சூரிய ஒளி வைட்டமின் D இன் சிறந்த மூலமாகும். உங்கள் சருமம் சூரிய ஒளியில் படும் போது உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் வைட்டமின் D ஆக மாறுகிறது. சூரியனின் UVB புரோட்டான்கள் தோல் செல்களில் உள்ள கொழுப்பிலிருந்து பிரதிபலிக்கின்றன. அவை வைட்டமின் டி தொகுப்புக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. வைட்டமின் டி தலைவலியைத் தடுக்கவும், நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் அவசியம். பகலில் சிறிது நேரம் வெயிலில் இருப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 19-70 வயதுடையவர்களுக்கு 600 IU வைட்டமின் டி-யும், 71 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு 800 IU வைட்டமின் டி-யும் தேவைப்படுகிறது. சூரிய ஒளியை தவிர மீன், பால் பொருட்கள், ஆரஞ்சு, பீன்ஸ், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றிலும் இருந்து உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துகளை பெற்று கொள்ளலாம்.

ALSO READ: Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

மெக்னீசியம் குறைபாடு:

மெக்னீசியமும் உடலுக்கு தேவையான முக்கிய சத்துகளில் ஒன்றாக உள்ளது. இது உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இரத்த அழுத்த அளவை பராமரிக்கவும் மெக்னீசியம் உதவுகிறது. உங்கள் உடலில் மெக்னீசியம் குறைபாடு ஏற்பட்டால், அதன் அறிகுறிகளாக சோர்வு, தலைவலி, பசியின்மை, குமட்டல், தசைப்பிடிப்பு மற்றும் கூச்ச உணர்வு ஆகியவை ஏற்படும். எனவே, உங்கள் உடலில் மெக்னீசியம் அளவை பராமரிக்க உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. இது தவிர முடிந்தவரை உங்கள் தினசரி உணவில் பச்சை இலைக் காய்கறிகள், கீரை, பால் மற்றும் தயிர் ஆகியவை சேர்த்துக்கொள்ளுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News