5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?

Firecrackers First Aid: பட்டாசுகள் வெடிக்கும்போது கை, கால்கள், முகம் மற்றும் கண்கள் அதிகமாக பாதிக்கப்படும். முதலில் தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரை காயத்தின் மீது ஊற்றுங்கள். கண்களில் காயம் என்றால், உள்ளங்கைகளில் தண்ணீர் வைத்து கண்களை முழித்து விடுங்கள்.

Firecracker Burn: பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா..? உடனடியாக என்ன செய்யலாம்..?
பட்டாசு வெடிப்பு (Image: FREEPIK)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 31 Oct 2024 06:05 AM

தீபாவளி பண்டிகை என்பது நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் தரும் அழகான பண்டிகை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டியை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட மிக ஆவலாக காத்திருக்கிறோம். தீபாவளிக்கு என்னதான் முன்னெச்சரிக்கையுடன், விழிப்புணர்வுகள் கொடுத்தாலும் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வளவுதான் பார்த்து பார்த்து வெடிகளை வெடித்தாலும் ஏதோ ஒரு காரணத்தில் தவறுதலாக வெடித்து விடுகிறது.

இது கைகள் மற்றும் கால்களில் வெடித்து தீக்காயங்களை ஏற்படுத்தில் விடுகிறது. இது தவிர, பட்டாசு வெடித்து, அதில் வரும் புகை சுவாச பிரச்சனை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ALSO READ: Papaya Seeds Benefits: உடல் பருமன் முதல் மலச்சிக்கல் வரை.. பல பிரச்சனைகளை தீர்க்கும் பப்பாளி விதைகள்..!

கவனக்குறைவு:

தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து பட்டாசுகளை வெடிக்க தொடங்கிவிடும். தீபாவளி நாளில் சில சிறுவர்கள் சரியாக இரவு 12 மணிக்கு வெடித்து கொண்டாட தொடங்குவார்கள். சிறுவர்களுக்கு தீபாவளி வந்துவிட்டால் குஷியில் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள். இதன் காரணமாக, கைகளில் பட்டாசுகளை பற்றவைத்து தூக்கி எறிவது போன்ற பிரச்சனைக்குரிய விஷயங்களை செய்வார்கள். அப்போது, எதிர்பாராத விதமாக கைகளில் வெடித்து பெரிய தீக்காயத்தை ஏற்படுத்தும். மேலும், பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் சிறிய விபத்து கூட உயிரை பறிக்கலாம்.

கண்கள் பாதிப்பு:

பட்டாசு வெடிக்கும்போது அதிலிருந்து வெளிவரும் புகை மற்றும் துகள்கள் கண்களுக்கு ஊடுருவி எரிச்சலை ஏற்படுத்தும். இது மேலும் மேலும் கண்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கார்னியா போன்ற பெரும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும், பட்டாசுகள் விழித்திரையை தொடும்போது கண் பார்வையும் பறிபோகலாம்.

பட்டாசுகள் மூலம் கண்களில் காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்..?

அறியாமை மற்றும் கவனக்குறைவால் பட்டாசு வெடித்து கண்களில் காயம் ஏற்பட்டால், முதலில் சுத்தமான காட்டன் கொண்டு மூடி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். கண்களில் ஏதேனும் பட்டாசு துகள்கள் இருந்தால், கண்களை சுத்தமான தண்ணீரை கொண்டு கழுவி கண் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

கை, கால்களில் பட்டாசுகள் வெடித்தால் என்ன செய்யலாம்..?

பட்டாசுகள் வெடிக்கும்போது கை, கால்கள், முகம் மற்றும் கண்கள் அதிகமாக பாதிக்கப்படும். முதலில் தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரை காயத்தின் மீது ஊற்றுங்கள். கண்களில் காயம் என்றால், உள்ளங்கைகளில் தண்ணீர் வைத்து கண்களை முழித்து விடுங்கள். காயம் பட்ட இடங்களில் பர்னல் போன்ற க்ரீம்களை பயன்படுத்துங்கள்.

காயத்தால் எரிச்சல் அதிகமாக இருந்தால் துளசி இலைகளை கசக்கி, காயத்தின் மீது ஊற்றவும். இது, எரிச்சலை குறைத்து, தீக்காயங்களை ஆற்றும். காயம் கடுமையாக இருந்தால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்துங்கள்.

அதேபோல், தீக்காயம் ஏற்பட்டவுடன் தேங்காய் எண்ணெயை தடவலாம். இது எரிச்சலை குறைத்து, விரைவில் காயத்தை ஆற்றும். இது தவிர, புளூ இங்க், உருளைக்கிழங்கு சாறு, அரைத்த அரிசி மாவுகளை தீக்காயத்தின் மீது வைக்கலாம். இதுவும் எரிச்சலை குறைத்து, உடனடி நிவாரணத்தையும் தரும்.

குளிர்ந்த நீர்:

பட்டாசுகளை வெடித்து கை, கால்களில் காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரை பயன்படுத்தலாம். இது காயங்கள், வீக்கம் மற்றும் வலியின் அபாயத்தை குறைக்கும்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்.. பாதுஷா, ஜாங்கிரி செய்வது எப்படி..?

தீக்காயம் ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்..?

பட்டாசுகள் வெடித்து தீக்காயங்கள் ஏற்படாமல் இருக்க பட்டாசுகளை வெடிக்கும்போது தரமான, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பட்டாசுகளை வாங்கி பயன்படுத்துங்கள். பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து சிறிது இடைவெளிவிட்டு வெடிப்பது நல்லது.

மேலும், கைகளில் வைத்து பட்டாசுகளை வெடிப்பது போன்ற தவறுகளை என்றும் செய்யாதீர்கள். இது உங்கள் கை விரல்களை கூட இழக்க செய்யும். எனவே, கவனமாக பட்டாசுகளை வெடித்து தீபாவளியை குடும்பத்தினருடன் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News