Corn Fritters: சோளம் இருந்தா ஹெல்தியான ஈவினிங் ஸ்நாக்ஸ் சோள வடை செய்து பாருங்க…
சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது நொறுக்குத்தீனி இருந்தால் போதும் உணவு தேவையில்லை என்று எண்ணுவார்கள். அப்படி சாப்பாடு வேண்டாம் என்று தவிர்ப்பவர்களுக்கு சத்துள்ள பண்டங்களை சாப்பிடக்கொடுப்பது நம்முடைய தலையாய கடமையாக உள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில், சோள வடை செய்துகொடுங்கள். இந்த பொருளெல்லாம் உங்களிடம் இருந்தால், உடனே சென்று சோள தோசயை ரெடி செய்யலாம்.
முழு சோளத்தைக் கொண்டு வீட்டிலேயே செய்யக்கூடிய வடை எளியமையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடியவாறு இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்க்கூடியது. வடையே பிடிக்காதவர்கள் கூட இந்த முழுசோள வடையை ரசித்து ருசித்து சாப்பிடுவர். முழு சோளமும், அரிசி மாவு இருந்தா போதும் அருமையான சோள வடை வீட்டிலேயே செய்யலாம். ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸாக வீட்டிலேயே செஞ்சு குடுங்க.. பசியும் அடங்கும்.. சத்தானதாகவும் இருக்கும்.
சோள வடை செய்யத் தேவையான பொருட்கள்
- வேகவைத்த முழு சோளம் – 2 கப்
- அரிசி மாவு – 1 கப்
- முட்டை – 1
- பெருஞ்சீரகம் – தேவையான அளவு
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது
- எள் – தேவையான அளவு
- இஞ்சி 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
- எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 ( பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – சிறுது ( பொடியாக நறுக்கியது)
- பூண்டு – 4 ( பொடியாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சோளத்தை நன்றாக வேக வைக்கவேண்டும். பின்னர், அதனை தனியாக சோள முத்துக்களை பிரித்து எடுத்துக்கொண்டு அதில், மிக்ஸியில், அதனை லேசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், அரிசி மாவினை சேர்த்து அதில், முட்டையை உடைத்து விட்டு கிளற வேண்டும். அந்த கலைவையில், வெங்காயம், பெருஞ்சீரகம், மைதா, எள், எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். அதன் பின் நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடை போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோள வடை தயார்.
Also Read: கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கா? டிப்ஸ் இதோ!