Bitter Gourd Benefits: கசப்பு காரணமாக பாகற்காயை ஒதுக்காதீங்க.. இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை தரும்!
Health Tips: உடலில் உள்ள பல்வேறு வகையான நோய்களில் இருந்து விடுபட அற்புதமான பலன்களை பாகற்காய் தருகிறது. பாகற்காய் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியமும் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த இந்த பாகற்காயில் மெக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. பாகற்காய் வயிறு முதல் மூளை வரை உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.
பாகற்காய் நன்மைகள்: நம் ஆரோக்கியத்திற்கு இயற்கை அளித்துள்ள அற்புதமான காய்கறிகளில் ஒன்று பாகற்காய். இது கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும், இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். உடலில் உள்ள பல்வேறு வகையான நோய்களில் இருந்து விடுபட அற்புதமான பலன்களை பாகற்காய் தருகிறது. பாகற்காய் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இதில் இரும்புச்சத்து மற்றும் கால்சியமும் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த இந்த பாகற்காயில் மெக்னீசியம், ஃபோலேட், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. பாகற்காய் வயிறு முதல் மூளை வரை உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதை தினமும் மிதமான அளவில் உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மைகளை தரும்.
ALSO READ: Health Tips: பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சுரைக்காய்.. தினசரி உணவில் மறக்காம சேருங்க!
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
பாகற்காய் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு மருந்து போன்று செயல்படும். பாகற்காயில் இன்சுலின் சுரப்பை தூண்டும் சேர்மங்கள் உள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடையை குறைக்க உதவும்:
பாகற்காயில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துகள் உள்ளது. எடையை குறைக்க உதவுவோருக்கு இது சிறந்த பலனை தரும். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். பாகற்காய் உட்கொள்வதன்மூலம் செரிமானம் மேம்படுவதுடன், செரிமான நொதிகளின் சுரப்பை தூண்டவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
பாகற்காயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாகற்காய் மழைகாலத்தில் ஏற்படும் நோய்களை எதிர்த்து போராடவும், தொற்றிநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிப்பதால் நோய் வருவதற்காக வாய்ப்புகள் குறையும்.
கெட்ட கொழுப்பை குறைக்கிறது:
பாகற்காய் சாற்றை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஆபத்து குறைகிறது. மேலும், இது சருமத்திற்கும் நன்மை பயக்கும். பாகற்காய் சாற்றில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தலைவலி:
தலைவலி மற்றும் தலை பாரம் போன்ற பொதுவான பிரச்சனைகளை நீக்குவதற்கு பாகற்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாகற்காயை சரியான அளவில் உணவில் பயன்படுத்துபவர்களுக்கு தலைவலி போன்ற பிரச்சனைகள் வராது.
மூட்டு வலி:
நீண்ட நாட்களாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிபடுவோர், தொடர்ந்து பாகற்காயை சாப்பிடுவது நல்லது. இது மூட்டு வலி மற்றும் குறிப்பாக முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
ALSO READ: Lung Health: நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா..? இந்த உணவுகளை எடுத்து கொள்வது மிக முக்கியம்!
வயிறு தொல்லை:
குமட்டல், அடிக்கடி ஏற்படும் வயிறு, வாயு, அஜீரணம், புளிப்பு ஏப்பம் மற்றும் வயிற்றில் உள்ள புழுக்கள் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், தொடர்ந்து பாகற்காயை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனைகள் தீரும்.