5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Walking Benefits: தினமும் 5,000 அடிகள் நடைபயிற்சி..! உடலில் இவ்வளவு கலோரிகளை எரிக்குமா?

Health Benefits: ஆரோக்கியமாகவும் இருக்க, சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. உங்களுக்காக அரை மணி நேரம் கூட ஒதுக்க முடிந்தால், தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வீட்டிற்கு வெளியே நடக்கவும். இதற்கு உங்கள் வசதிக்கேற்ப காலை அல்லது மாலை நேரத்தை தேர்வு செய்யலாம்.

Walking Benefits: தினமும் 5,000 அடிகள் நடைபயிற்சி..! உடலில் இவ்வளவு கலோரிகளை எரிக்குமா?
நடைபயிற்சி (Image: GETTY)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 29 Oct 2024 14:47 PM

எடை அதிகரிப்பு பிரச்சனையால் பல கோடி அவதிப்பட்டு வருகின்றனர். அதிலிருந்து விடுபட பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில், நடைபயிற்சியும் ஒன்று. நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். தினமும் 10 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் பல வகையான நோய்களில் இருந்து விலகி இருக்க முடியும். அதேபோல், நீங்கள் 5 ஆயிரம் அடிகளுக்கு குறைவாக நடந்தால், உங்கள் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்றும், 4 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் இளம் வயதிலேயே மாரடைப்பு போன்ற அபாயத்தை குறைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தவிரம் 2,300 படிகள் நடப்பது உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு பல நன்மைகளை தரும் என்றும் கூறப்படுகிறது.

ஆரோக்கியமாகவும் இருக்க, சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. உங்களுக்காக அரை மணி நேரம் கூட ஒதுக்க முடிந்தால், தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வீட்டிற்கு வெளியே நடக்கவும். இதற்கு உங்கள் வசதிக்கேற்ப காலை அல்லது மாலை நேரத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் அனைத்து பாகங்களிலும் இயக்கம் உருவாகி இரத்த ஓட்டமும் மேம்படும்.

ALSO READ: Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் ஸ்நாக்ஸ்.. உளுந்த வடை, பருப்பு வடை செய்வது எப்படி..?

ஒவ்வொரு அடிக்கும் எத்தனை கலோரிகள் குறையும்..?

இன்றைய நவீன காலத்தில் நடப்பது, ஓடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகிறது என்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெரிந்து கொள்கிறோம். ஆனால், அது முற்றிலும் உண்மையா என்பது தெரியாது. ஒரு கணக்கீட்டின் படி, ஒருவர் 1000 அடிகள் நடக்கும்போது, 30 முதல் 40 கலோரிகளை தன் உடலில் இருந்து எரிக்கிறார். அதன்படி, 10000 அடிகள் நடக்கும்போது 300 முதல் 400 கலோரிகளை குறைக்க முடியும். ஒரு அடி எரியும் கலோரிகளின் எண்ணிக்கையானது படிகள், நபரின் எடை மற்றும் வேகம் ஆகியவற்றை பொறுத்தது.

எப்படி தூரத்தை அதிகரிப்பது..?

நடைபயிற்சி நடக்க விரும்புவோர் ஆரம்பத்தில் 1000 அடிகளில் இருந்து நடக்க தொடங்கலாம். இது உங்களுக்கு ஆரம்பத்தில் கடினமாக இருக்காது. தினமும் நீங்கள் படிப்படியாக நடக்கும் தூரத்தை அதிகரிக்கும்போது, உங்களுக்கு நல்ல பலனை தரும். நீங்கள் 1 மணி நேரத்தில் 5000 முதல் 10 ஆயிரம் நடந்தபிறகு, பின் வரும் நாட்களில் ஜாகிங், ரன்னிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இது உங்களது எடையை குறைக்க உதவி செய்யும். நீங்கள் 30 நிமிடம் வெறுமனே நடப்பதை விட, 1 மணி நேரத்தில் 5000 அடிகள் நடப்பது உங்களது எடையை எளிதிலும், விரைவாகவும் குறைக்க உதவி செய்யும்.

மன ஆரோக்கியம் மேம்படும்:

நடைபயிற்சி நமது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்க, 150 வினாடிகள் நடைபயிற்சி சிறந்தது. நடைபயிற்சி மேற்கொள்ளும்போது ஆக்ஸிஜன் மூளையின் செல்களை சரியாக சென்றடைகிறது. இது செல்களை சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது தவிர, நடைபயிற்சி செய்யும்போது எண்டோர்பின்கள் வெளியிடப்படும். இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைத்து, மன அழுத்தத்தை மேம்படுத்தும்.

இதயத்திற்கு நன்மை:

நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்து, உயர் இரத்த அழுத்த பிரச்சனையையும் குறைக்கும். இதன்மூலம், இதய ஆரோக்கியம் மேம்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையும்:

நடைபயிற்சி என்பது ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும். இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, நோய்கள் மற்றும் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தூக்கம்:

நடைபயிற்சி செய்வது உங்களுக்கு சுறுசுறுப்பையும், அதே நேரத்தில் இரவில் சோர்வை தரும். இதன் காரணமாக, தூக்கம் இல்லாமல் அவதிப்படுவோர் மனநிலை மேம்பட்டு, இரவில் நன்றாக தூங்கி, காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

ALSO READ: Mayonnaise Side Effects: மயோனைஸ் லவ்வரா நீங்கள்..? இதயத்திற்கு இவ்வளவு ஆபத்தை தரும்..!

தசை மற்றும் எலும்பு வலுவடையும்:

நடைபயிற்சியின்போது நமது மூட்டுகள் மற்றும் தசைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் காரணமாக, அவற்றின் வலிமை அதிகரிக்க தொடங்கும். மேலும், மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த நிவாரணத்தை தரும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News