5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதுளை பழத்துக்குள் ஒளிந்திருக்கும் பலநூறு நன்மைகள்!

Benefits of Pomegranate: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளை பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம்‌ போன்ற சத்துக்கள் கிடைக்கும். மாதுளையில் சருமத்தை அழகுபடுத்தும் தன்மையும் உள்ளது. இதை மற்ற நேரங்களில் சாப்பிடுவதை விட வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது என‌ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாதுளை பழத்துக்குள் ஒளிந்திருக்கும் பலநூறு நன்மைகள்!
மாதுளம் பழம் (Photo Credit: twomeows/Moment/Getty Images)
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 17 Sep 2024 22:27 PM

மாதுளை பழத்தில் பல சத்துக்கள் மறைந்துள்ளது. எனவே தான் மாதுளை பழத்தை சாப்பிட மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மாதுளையில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மாதுளையில் உள்ள பாலிபினால்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. அதனால் தான் மாதுளை சத்து நிறைந்த பழம் என்று அறியப்படுகிறது. தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாதுளை பழங்களை சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கிறது. மாதுளையில் சருமத்தை அழகுபடுத்தும் தன்மையும் உள்ளது. இதை மற்ற நேரங்களில் சாப்பிடுவதை விட வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாதுளை விதைகளுடன் ஜூஸ் செய்து குடிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளை பழம் சாப்பிடுவதால் அல்லது ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read: Fish Side Effects: தவறுதலாக கூட இந்த உணவுகளை மீனுடன் சாப்பிடாதீர்கள்.. பக்க விளைவுகளை தரலாம்..!

மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • தினமும் ஒரு மாதுளையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது.
  • வழக்கமாக மாதுளை எடுத்துக் கொள்வதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் உடலில் ஏற்பட்ட வீக்கத்தையும் குறைக்கிறது.
  • மாதுளை இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வராமல் பாதுகாக்கிறது.
  • மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை இதய நோயாளிகளுக்கு நல்லது.
  • உடலில் கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்கிறது.
  • தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். இது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கிறது.
  • மாதுளை இரத்த கொதிப்பு பிரச்சனையையும் கட்டுப்படுத்துகிறது.
  • மாதுளையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. இதனை உட்கொள்வதால் குடல் சுத்தமாகும். இது செரிமான அமைப்பில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • இதனை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை நீங்கும்.
  • மாதுளையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது மற்றும் உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்குகிறது.
  • மாதுளையில் பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் கூறுகளும் உள்ளன.
  • மாதுளை வைட்டமின் சி யின் நல்ல மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மாதுளை சாப்பிடுவதால் வெள்ளை அணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
  • மாதுளையில் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் தன்மைகள்‌ உள்ளன.
  • மாதுளை சாப்பிடுவதால் மூளை ஆரோக்கியமும் மேம்படும்.
  • அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.
  • மாதுளையில் நரம்பியல் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன.
  • இதனை தினமும் சாப்பிடுவதால் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது.
  • பித்தம் சம்பந்தமான அனைத்து உடல் நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • மாதுளை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் கூர்மை ஆகிறது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  • அலர்ஜி, அரிப்பு, படை போன்ற பாதிப்பு இருப்பவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிடும் முன் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்
  • மாதுளம் பழத்தில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் மாதுளம் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

Also Read: குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்புச்சத்து குறைபாடு.. சரி செய்வது எப்படி?

Latest News